இந்தியாவில் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிகபட்ச சேசிங் செய்யப்பட்ட ரன்கள் எவ்வளவு?

India vs England 4th Test: 192 ரன்கள் அடித்தால் இங்கிலாந்துக்கு எதிரான தொடரை கைப்பற்றலாம் என்ற முயற்சியில் 4வது இன்னிங்சில் இந்தியா விளையாடி வருகிறது.  

Written by - RK Spark | Last Updated : Feb 26, 2024, 06:24 AM IST
  • பரபரப்பான கட்டத்தில் 4வது டெஸ்ட்.
  • இன்று 4ம் நாள் ஆட்டம் நடைபெற உள்ளது.
  • இந்தியாவிற்கு இன்னும் 152 ரன்கள் தேவை.
இந்தியாவில் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிகபட்ச சேசிங் செய்யப்பட்ட ரன்கள் எவ்வளவு?  title=

India vs England 4th Test: ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் உள்ள ஜேஎஸ்சிஏ ஸ்டேடியத்தில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. ஜார்கண்ட் மாநில கிரிக்கெட் சங்கத்தால் இயக்கப்படும், இந்த ஸ்டேடியம் கடந்த 2013ல் திறக்கப்பட்டது. கிட்டத்தட்ட 39,000 பேர் வரை இந்த ஸ்டேடியத்தில் போட்டிகளை பார்க்க முடியும்.  இது ஜார்கண்ட் கிரிக்கெட் அணியின் சொந்த மைதானம் ஆகும்.  இந்த ராஞ்சி மைதானத்தில் இந்தியா விளையாடும் மூன்றாவது டெஸ்ட் போட்டி இதுவாகும். இதற்கு முன்பு, அக்டோபர் 2019ல் தென்னாப்பிரிக்காவிற்கு எதிராகவும், மார்ச் 2017ல் ஆஸ்திரேலியாவிற்கு எதிராகவும் விளையாடினர். தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான போட்டியில் இந்தியா ஒரு இன்னிங்ஸ் மற்றும் 202 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதே சமயம் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான போட்டி டிராவில் முடிந்தது.

மேலும் படிக்க | நடப்பு சாம்பியனை சம்பவம் செய்த தமிழ்நாடு... ரஞ்சி டிராபி அரையிறுதியில் என்ட்ரி - ஏன் முக்கியம்?

இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்தியா 2-1 என்று முன்னிலையில் உள்ளது. தற்போது நடைபெற்று வரும் நான்காவது டெஸ்டில் முதலில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்தது. முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணியின் பேட்ஸ்மேன்கள் ரன்கள் அடிக்க தடுமாறினாலும், ஜோ ரூட் சிறப்பாக விளையாடி சதம் அடித்தார். இவர் மட்டும் தனியாளாக 122 ரன்கள் அடித்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இதனால் இங்கிலாந்து முதலில் இன்னிங்சில் 353 ரன்களை குவித்தது. இதனைத் தொடர்ந்து களம் இறங்கிய இந்திய அணிக்கு ஆரம்பம் நன்றாக இருந்தாலும் அடுத்தடுத்து விக்கெடுகளை இழந்து தடுமாறியது. ஜெய்ஸ்வால் 73 ரன்கள் அடித்து ஆட்டம் இழந்தார், பின்பு எட்டாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த விக்கெட் கீப்பர் துருவ் ஜுரேல் மற்றும் குல்தீப் யாதவ் அணியை சரிவிலிருந்து மீட்டனர். 

சிறப்பாக விளையாடிய துருவ் ஜுரேல் 90 ரன்கள் அடித்து ஆட்டம் இழந்தார். முதல் இன்னிங்சில் இந்திய அணி பேட்ஸ்மேனின் அதிகபட்ச ஸ்கோர் இதுவே. மூன்றாவது நாள் காலையில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 307 ரன்களுக்கு ஆட்டம் இழந்தது. 46 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸில் களமிறங்க இங்கிலாந்து அணி அஸ்வின் மற்றும் குல்தீப் சுழலில் வீழ்ந்தது. கிட்டத்தட்ட இந்த போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற அதிக வாய்ப்பு இருந்த நிலையில், இந்திய அணியின் பவுலர்கள் அதனை இந்தியா பக்கம் திருப்பி உள்ளனர். இரண்டு இன்னிங்சில் இங்கிலாந்து அணி 145 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இந்த தொடரில் அஸ்வின் தனது முதல் ஐந்து விக்கெட்களை வீழ்த்தியுள்ளார்.

192 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற நிலையில் இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸில் களமிறங்கியது. மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் விக்கெட் இழப்பின்றி இந்தியா 40 ரன்கள் அடித்துள்ளது. இன்று நான்காம் நாள் ஆட்டத்தில் இந்திய அணி 152 ரன்கள் அடித்தால் இந்த போட்டியில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்ற முடியும். இங்கிலாந்து அணி இந்தியாவின் 10 விக்கெட்களை வீழ்த்தினால் தொடரை இரண்டுக்கு இரண்டு என்று சமநிலைப்படுத்த முடியும்.  இதனால் இன்றைய நாள் மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும்.   இந்த ஸ்டேடியத்தில் 4வது இன்னிங்சில் அதிகபட்சமாக இரண்டு முறை மட்டுமே 192 ரன்களுக்கு மேல் சேசிங் செய்யப்பட்டுள்ளது. 

 இந்தியாவின் அதிகபட்ச நான்காவது இன்னிங்ஸ் ஸ்கோர்

1) 387/4 - இந்தியா vs இங்கிலாந்து, சென்னை, 2008

2) 364/6 - இந்தியா vs பாகிஸ்தான், டெல்லி, 1979

3) 355/8 - இந்தியா vs வெஸ்ட் இண்டீஸ், மும்பை, 1949

4) 347/10 - இந்தியா vs ஆஸ்திரேலியா, சென்னை, 1986

5) 325/3 - இந்தியா vs வெஸ்ட் இண்டீஸ், கொல்கத்தா, 1948

6) 299/5 - இலங்கை எதிராக இந்தியா, டெல்லி, 2017

மேலும் படிக்க | பரிதாப நிலையில் பாஸ்பால்... வெற்றியை நெருங்கும் இந்தியா... ரோஹித் - ஜெய்ஸ்வால் மிரட்டல்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News