IND vs PAK: இந்திய அணிக்கான 'ஆசிய கோப்பை ' போட்டி இன்று தொடங்குகிறது. முதல் போட்டியில் பாரம்பரிய எதிரியான பாகிஸ்தானை இந்தியா அணி எதிர்கொள்கிறது. இந்த போட்டிக்கு கேப்டன் ரோகித் சர்மா தலைமையில் இந்திய அணி தயாராக உள்ளது. டி20 உலகக் கோப்பை தோல்விக்கு பழிவாங்கும் நோக்கில் களம் இறங்கவும் இருக்கிறது. ஆனால் இந்த போட்டிக்கு முன்பாக 3 விஷயங்கள் கேப்டன் ரோகித் சர்மாவுக்கு தொந்தரவாக மாறியிருக்கிறது.
இந்திய அணியின் தொடக்க ஜோடி
கடந்த சில போட்டிகளில் இந்திய அணியின் தொடக்க ஜோடி தொடர்ந்து மாற்றப்பட்டு வருகிறது. ஆசிய கோப்பை தொடக்க ஆட்டத்தில் ரோஹித் சர்மாவுடன் கேஎல் ராகுல் களம் இறங்குகிறார். ஆனால் காயத்திற்கு பிறகு கே.எல்.ராகுல் களம் இறங்குவதால், அவர் எப்படி ஆடுவார்? என்ற பதற்றம் கேப்டன் ரோகித் சர்மாவுக்கு ஏற்பட்டுள்ளது. அவர் சரியாக ஆடவில்லை என்றால் அது இந்திய அணிக்கு பின்னடைவாக அமையும் வாய்ப்பு இருக்கிறது.
விராட் கோலி ஃபார்ம்
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி பெரிய இடைவெளிக்குப் பிறகு களம் இறங்க இருக்கிறார். இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கு பிறகு ஓய்வில் இருந்து வரும் விராட் கோலி, நேரடியாக ஆசிய கோப்பையில் விளையாடுகிறார். கடந்த சில ஆண்டுகளாகவே சரியான ஃபார்மில் இல்லாமல் இருக்கும் கோலி, இந்தப் போட்டியில் நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்.
பந்துவீச்சு பலம்
ஆசிய கோப்பைக்கு முன் இந்திய அணிக்கு மிகப்பெரிய அடியாக இருந்தது முன்னணி பந்துவீச்சாளர்களான ஜஸ்பிரித் பும்ரா மற்றும் ஹர்ஷல் படேல் காயமடைந்தனர். அவர்கள் இருவரும் அணியில் இல்லாத நிலையில், இந்திய அணியின் வேகப்பந்துவீச்சை புவனேஷ்குமார் தொடங்குவார். அவருக்கு பக்கபலமாக ஆவேஷ் கான் அல்லது அர்ஷ்தீப் சிங் ஆகியோரில் யாரேனும் ஒருவர் களம் காண வாய்ப்புள்ளது. இருவரும் புதுமுக வீரர்கள் என்பதால் பாகிஸ்தானுக்கு எதிரான அவர்களின் ஆட்டம் எப்படி இருக்கப்போகிறது? என்பது எதிர்பார்ப்பாக உள்ளது. இந்த விஷயங்கள் கேப்டன் ரோகித் சர்மாவுக்கும் கவலையாக இருக்கும் நிலையில், அந்த கவலையை உடைக்கும் வகையில் வீர ர்கள் தங்களின் திறமையை வெளிப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றனர்.
மேலும் படிக்க | அவுட்டா? நாட் அவுட்டா? முதல் போட்டியிலேயே எழுந்த சர்ச்சை!
மேலும் படிக்க | INDvsPAK: பிளேயிங் 11-ல் விளையாட போவது இவர்கள் தான்! சூசகமாக அறிவித்த பிசிசிஐ!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ