இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கொல்கத்தாவில் முடிவடைந்த நிலையில், இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று நாக்பூரில் தொடங்கியது.
இரண்டாவது டெஸ்ட் போட்டியில் மூன்று மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. ஷிகர் தவான், புவனேஸ்வர் குமார், முகமது ஷமிக்கு பதிலாக ரோகித் ஷர்மா, முரளி விஜய், இஷாந்த் ஷர்மாவுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடி வருகிறது. தற்போதைய நிலவரப்படி இலங்கை அணி 79.1 ஓவர்களில் அனைத்து விக்கெட் இழந்து 205 ரன்கள் எடுத்துள்ளது. இலங்கை அணியில் கேப்டன் தினேஷ் சந்திமால்(57) மற்றும் டிமுத் கருணாரட்னே(51) தனது அரை சதத்தை பூர்த்தி செய்தனர்.மற்ற வீர்கள் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தனர்.
இந்திய அணி சார்பில் இஷாந்த் ஷர்மா, ஜடேஜா தலா மூன்று விக்கெட்டும், அஸ்வின் நான்கு விக்கெட்டும் வீழ்த்தினார்கள்
இந்தியா தனது முதல் இன்னிங்க்ஸ் விளையாட உள்ளது.
கொல்கத்தாவில் நடைப்பெற்ற முதல் டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
79.1: WICKET! R Herath (4) is out, c Ajinkya Rahane b Ravichandran Ashwin, 205 all out
— BCCI (@BCCI) November 24, 2017