கேஎல் ராகுல் நீக்கம்! பிளேயிங் 11ல் ரியான் பராக்! 3வது போட்டிக்கான இந்திய அணி!

India vs Sri Lanka: இலங்கை அணிக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 32 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்துள்ளது. இதனால் கடைசி போட்டி சுவாரஸ்யமாக இருக்கும்.  

Written by - RK Spark | Last Updated : Aug 5, 2024, 08:42 AM IST
  • கேஎல் ராகுலுக்கு பதில் ரிஷப் பந்த்.
  • ஒருநாள் போட்டியில் ரியான் பராக் அறிமுகம்.
  • 3வது போட்டிக்கான இந்தியாவின் பிளேயிங் XI.
கேஎல் ராகுல் நீக்கம்! பிளேயிங் 11ல் ரியான் பராக்! 3வது போட்டிக்கான இந்திய அணி! title=

India vs Sri Lanka: இந்திய கிரிக்கெட் அணி இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரில் மோசமாக விளையாடி வருகிறது. மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை 3-0 என்று வென்று இருந்த போதிலும், ஒருநாள் போட்டியில் தோல்வியை சந்தித்துள்ளது. அடுத்த ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி நடைபெற உள்ள நிலையில், இந்த தொடரில் தோல்வி அடைந்தால் பெரிய பாதிப்பாக அமையும். வரும் புதன்கிழமை ஆகஸ்ட் 7ம் தேதி இலங்கைக்கு எதிராக கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய அணி விளையாட உள்ளது. இந்த போட்டியில் கண்டிப்பாக வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இந்தியா உள்ளது. ஆகஸ்ட் 2ம் தேதி நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டி எதிர்பாராத விதமாக டையில் முடிந்தது.

மேலும் படிக்க | யார் இந்த ஜெஃப்ரி வாண்டர்சே? இந்திய அணியை புரட்டிப்போட்ட ஸ்பின்னர்!

 

இதனை தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியில் 32 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா தோல்வியடைந்தது. இதனால் தொடரில் இலங்கை அணி 1-0 என முன்னிலையில் உள்ளது. கடந்த 27 ஆண்டுகளில் ஒருமுறை கூட இலங்கை அணி ஒருநாள் தொடரை இந்தியாவிற்கு எதிராக வென்றதில்லை. கடைசியாக 1997ம் ஆண்டு தான் இலங்கை அணி ஒரு ஒருநாள் தொடரில் இந்தியாவை வீழ்த்தி இருந்தது. எனவே இந்த சாதனையை ரோஹித் ஷர்மா தலைமையிலான இந்திய அணி முறியடிக்க விடாமல் பார்த்து கொள்ளும். மூன்றாவது ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்று தொடரை 1-1 சமன் செய்ய அதிக முயற்சிகளை மேற்கொள்ளும். முதல் இரண்டு போட்டிகளில் மாற்றம் இல்லாமல் களமிறங்கிய இந்திய அணியில் 3வது போட்டியில் சில மாற்றங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்திய அணியின் தோல்விக்கு காரணமாக பேட்டிங் ஆர்டரை மாற்றியது தான் என்று கூறப்படுகிறது. ஒருநாள் தொடரின் முதல் இரண்டு ஆட்டங்களில் வாஷிங்டன் சுந்தர் நான்காவது இடத்தில் களமிறங்கினார். அதே சமயம் ஷிவம் துபே தாமதமாக களமிறங்கினார். மேலும் இரண்டாவது போட்டியில் அக்சர் படேல் ஐந்தாவது இடத்தில் களமிறங்கினார். இதனால் ஷ்ரேயாஸ் ஐயர் மற்றும் கேஎல் ராகுல் மாற்றி களமிறக்கப்பட்டனர். ஆனால் இந்த மாற்றம் தோல்வியில் தான் முடிந்தது. இந்நிலையில் 3வது ஒருநாள் போட்டியில் மிடில் ஆர்டரில் ரிஷப் பண்ட் மீண்டும் களமிறங்க வாய்ப்புள்ளது. சமீபத்தில் நடந்து முடிந்த டி20 உலக கோப்பையில் பந்த் சிறப்பாக விளையாடி இருந்தார்.

ரிஷப் பந்த் கேஎல் ராகுல் அல்லது ஐயருக்கு பதில் அணியில் இடம் பெற வாய்ப்புள்ளது. மேலும் முதல் போட்டியில் எட்டாவது இடத்தில் களமிறங்கிய சிவம் துபே சில முக்கியமான சிக்சர்களை அடித்தார். ஆனால் இரண்டாவது போட்டியில் டக் அவர் ஆனார். இந்நிலையில் அவருக்கு பதில் ரியான் பராக் அணியில் இடம் பெற வாய்ப்புள்ளது. மேலும் இலங்கை மைதானம் ஸ்பின்னர்களுக்கு உதவுவதால் ரியான் பராக் சிறந்த தேர்வாக இருப்பார். பவுலிங்கில் அர்ஷ்தீப்க்கு பதிலாக ஹர்ஷித் ராணா அறிமுகமாக வாய்ப்புள்ளது. ஐபிஎல் 2024ல் கொல்கத்தா அணிக்காக விளையாடிய இவர் சிறப்பாக பந்து வீசி இருந்தார்.

இந்தியாவின் உத்ததேச அணி: ஷுப்மான் கில், ரோஹித் சர்மா, விராட் கோலி, ரிஷப் பந்த், ஷ்ரேயாஸ் ஐயர், ரியான் பராக், வாஷிங்டன் சுந்தர், அக்சர் படேல், குல்தீப் யாதவ், ஹர்ஷித் ராணா, சிராஜ்

மேலும் படிக்க | இந்த மூன்று பிளேயர்கள் மட்டும் ஏலத்துக்கு வந்தால் ஐபிஎல் 2025ல் மெகா ஜாக்பாட் தான்..!

 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News