IND vs WI 3வது ஒருநாள் போட்டி: டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பேட்டிங் தேர்வு

மேற்கிந்தியா தீவுக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டி வெற்றி பெற்றி தொடரை தட்டித்தூக்கும் முனைப்பில் இந்தியா.

Written by - Shiva Murugesan | Last Updated : Aug 14, 2019, 06:37 PM IST
IND vs WI 3வது ஒருநாள் போட்டி: டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பேட்டிங் தேர்வு title=

18:40 14-08-2019
கடைசி மற்றும் மூன்றாவது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. இதனையடுத்து இன்னும் சற்று நேரத்தில் இந்திய அணி பந்து வீச உள்ளது.

 


டிரினிடாட்: மேற்கிந்தியா தீவுக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டி வெற்றி பெற்றி தொடரை தட்டித்தூக்கும் முனைப்பில் இந்தியா. என்ன நடக்கும் இன்று.... இரவு 7 மணிக்கு ஆட்டம் ஆரம்பமாகும். 

விராட்கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, மேற்கிந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இவ்விரு அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரை இந்திய அணி 3-0 என்ற கணக்கில் ஏற்கனவே கைப்பற்றியது.

இதனைத்தொடர்ந்து தற்போது 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டித் தொடர் நடைப்பெற்று வருகிறது. முன்னதாக முதல் ஒருநாள் போட்டி மழையின் காரணமாக கைவிடப்பட்ட நிலையில், கடந்த 11 ஆம் தேதி இரண்டாவது ஒருநாள் போட்டி போர்ட் ஆப் ஸ்பெயினில் நடைபெற்றது.

அந்தப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பேட்டிங்கைத் தேர்வு செய்து விளையாடினார். அந்த போட்டியில் சிறப்பாக விளையாடிய கோலி 112 பந்துகளில் தனது 42-வது சதத்தை பதிவு செய்து அசத்தினார். மறுமுனையில் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ஸ்ரேயாஸ் அய்யர் 71(68) ரன்களில் ஆட்டமிழந்தார். இறுதியில் ரவீந்திர ஜடேஜா 16(16) ரன்களும், முகமது ஷமி 3(5) ரன்களும் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். முடிவில் இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஒவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 279 ரன்கள் சேர்த்தது. மேற்கிந்திய அணி சார்பில் பிராத்வெய்ட் 3 விக்கெட்டுகளும், ஜாசன் ஹோல்டர், ரோஸ்டன் சேஸ் மற்றும் ஷெல்டன் காட்ரெல் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். 

280 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய மேற்கிந்திய அணி தொடர்ந்து விளையாடியது. ஆனால் 12 வது ஓவரில் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் சிறிது நேரம் கழித்து தாமதாக தொடங்கியது. காரணமாக ஆட்டம் 46 ஓவர்களாக (DLS முறைப்படி) குறைக்கப்பட்டு, வெற்றி இலக்கு 270-ஆக நிர்ணயிக்கப்பட்டது. இறுதியில் நிர்ணயிக்கப்பட்ட 42 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்களை இழந்து மேற்கிந்திய அணி 210 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்திய அணி 59 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்திய அணி தரப்பில் புவனேஷ்வர்குமார் 4 விக்கெட்களும்,  முகமது ஷமி மற்றும் குல்தீப் யாதவ் தலா 2 விக்கெட்களும், அஹமது,  ரவீந்திர ஜடேஜா தலா 1 விக்கெட்களையும் வீழ்த்தினர். இப்போட்டியில் பெற்ற வெற்றியின் மூலம் இந்தியா 3 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.

இந்தநிலையில், இன்று இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி போர்ட் ஆப் ஸ்பெயினில் நடக்கிறது. ஜாசன் ஹோல்டர் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணி தொடரை சமன் செய்ய கடுமையாக போராடும். அதேசமயத்தில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி நல்ல பார்மில் உள்ளது. எனவே இன்றைய போட்டியில் வெற்றி டி20 தொடரை போல ஒருநாள் போட்டி தொடரையும் வெல்லும் முனைப்பில் விளையாடக்கூடும்.

இந்தப் போட்டி இந்திய நேரப்படி இரவு 7 மணிக்கு தொடங்கவுள்ளது.

Trending News