ஆசிய விளையாட்டுப் போட்டி: இன்று இந்தியாவுக்கு மூன்று தங்கம், மொத்தம் 84 பதக்கங்கள்!

India At Asian Games 2023: ஆசிய விளையாட்டுப் போட்டியின் 12வது நாளான இன்று, மேலும் மூடரு தங்க பதக்கத்தை கைப்பற்றி உள்ளது. இந்தியாவின் பதக்க எண்ணிக்கை 84-ஐ நெருங்கியது.

Written by - Shiva Murugesan | Last Updated : Oct 5, 2023, 02:57 PM IST
  • 12வது நாளான இன்று.. இரண்டு தங்கப் பதக்கத்தை கைப்பற்றிய இந்தியா
  • பேட்மிண்டன் ஆடவர் ஒற்றையர் பிரிவில் ஹெச்.எஸ்.பிரணாய் இறுதிப்போட்டிக்கு நுழைவு.
  • மல்யுத்தம் போட்டியில் பூஜா கெலாட் இறுதிப் போட்டிக்கு முன்னேறி உள்ளார்.
ஆசிய விளையாட்டுப் போட்டி: இன்று இந்தியாவுக்கு மூன்று தங்கம், மொத்தம் 84 பதக்கங்கள்! title=

Hangzhou Asian Games 2023 Updates: ஹாங்சோவில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டியின் 12வது நாளான இன்று, ஆண்களுக்கான வில்வித்தை போட்டியில் ஓஜாஸ் பிரவீன், அபிஷேக் வர்மா, பிரதமேஷ் சமாதான் ஆகிய மூவரும் இந்தியாவுக்கு மூன்றாவது தங்கத்தை வென்று தந்துள்ளனர். அதேபோல ஸ்குவாஷ், கலப்பு அணியில் இந்தியாவின் தீபிகா பல்லிக்கல் மற்றும் ஹரிந்தர் பால் சிங் தங்கம் வென்றுள்ளனர். இந்தியாவுக்கு இது இரண்டாவது தங்கமாகும். அதற்கு முன்னதாக ஜோதி சுரேகா, அதிதி கோபிசந்த் சுவாமி, பிரனீத் கவுர் ஆகிய மூவரும் வில்வித்தையின் கலப்பு சுற்றில் தங்கப் பதக்கம் வென்றனர்.

மறுபுறம், பேட்மிண்டன் ஆடவர் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் மலேசியாவின் லி ஜி ஜியாவை வீழ்த்தி ஹெச்.எஸ்.பிரணாய் இறுதி போட்டியில் நுழைந்துள்ளார். இதன் மூலம் இந்தியாவுக்கு பதக்கத்தை உறுதி செய்துள்ளார். ஆசிய விளையாட்டுப் போட்டி 2023 தொடரில் பாட்மிண்டனில் அரையிறுதியில் தோல்வியடையும் வீரர்கள் இருவருக்கும் வெண்கலப் பதக்கம் வழங்கப்படுகிறது.

அதேநேரம், ஆசிய விளையாட்டுப் போட்டியில், பெண்களுக்கான ஹாக்கி அரையிறுதிப் போட்டி இந்தியா-சீனா இடையே நடந்து வருகிறது. சீனா 1-0 என முன்னிலையில் உள்ளது.

19வது ஆசிய விளையாட்டுப் போட்டியில் இதுவரை இந்தியா 83 பதக்கங்களை வென்றுள்ளது. இதில் 20 தங்கம் அடங்கும். 2018 ஆசிய விளையாட்டுப் போட்டியில், இந்தியா தனது சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி 16 தங்கம் உட்பட 70 பதக்கங்களை வென்றது  தான் அதிகமான எண்ணிக்கையாக இருந்தது. இந்தமுறை அனைத்து சாதனைகளையும் முறியடித்து இந்தியா அதிக பதக்கங்களை குவித்து வருகிறது.

மேலும் படிக்க - Asian Games 2023: எந்த பிரிவில் எத்தனை பதக்கங்களை இந்தியா வென்றுள்ளது -முழு விவரம்

தங்கக் கோப்பையை வென்ற இந்திய வீரர்கள்

வில்வித்தை: மகளிர் கூட்டு அணி, பைனலில் சீன தைபே அணியை வீழ்த்தியது. காம்பவுண்ட் ரவுண்டு வில்வித்தையில், ஜோதி சுரேகா, அதிதி கோபிசந்த் சுவாமி, பிரனீத் கவுர் மூவரும் இந்தியாவுக்கு தங்கம் வென்றுள்ளனர். இறுதிப் போட்டியில் சீன தைபே அணியை 230-219 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தியது. முன்னதாக, இந்திய அணி அரையிறுதியில் இந்தோனேசியா அணியை 233-229 என்ற புள்ளிக்கணக்கிலும், காலிறுதியில் ஹாங்காங்கை 231-220 என்ற புள்ளிக்கணக்கிலும் வீழ்த்தியது.

ஸ்குவாஷ்: கலப்பு இரட்டையர் பிரிவில் தீபிகா பல்லிகல்- ஹரிந்தர் பால் சிங் தங்கம் வென்றனர். கலப்பு இரட்டையர் பிரிவில் தீபிகா பல்லிகல், ஹரிந்தர் பால் சிங் ஜோடி 2-0 என்ற கணக்கில் மலேசிய ஜோடியான முகமது ஷபிக், அய்ஃபா அஸ்மான் ஜோடியை தோற்கடித்தது.

மேலும் படிக்க - Asian Games 2023: அடுத்தடுத்து பதக்கங்களை குவிக்கும் இந்தியா..

ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியாவின் பதக்க எண்ணிக்கை பட்டியல்

வரிசை நாடு தங்கம் வெள்ளி வெண்கலம் மொத்தம்
1 சீனா 174 95 52 321
2 ஜப்பான் 37 51 59 147
3 தென் கொரியா 33 45 71 149
4 இந்தியா 21 31 32 84
5 உஸ்பெகிஸ்தான் 16 16 22 54

இந்திய வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்கும் போட்டிகளின் நிலவரம்

மல்யுத்தம்: பூஜா கெலாட் இறுதிப் போட்டிக்கு முன்னேறியதன் மூலம் இந்தியாவின் தங்கம் அல்லது வெள்ளி நம்பிக்கையை உயிர்ப்பித்துள்ளார். 50 கிலோ எடைப்பிரிவில் பூஜா கெலாட் அரையிறுதியில் மங்கோலியாவின் சோக்ட்-ஓச்சிர் நமுண்ட்சே ஜோடியை தோற்கடித்தார். 

பேட்மிண்டன்: ஆடவர் ஒற்றையர் பிரிவில் ஹெச்.எஸ்.பிரணாய் 21-16, 21-23 மற்றும் 22-20 என்ற செட் கணக்கில் மலேசியாவின் லீ ஜீ ஜியாவை தோற்கடித்தார். முதல் ஆட்டத்தில் தோல்வியடைந்த மலேசியா, இரண்டாவது ஆட்டத்தில் வெற்றி பெற்று மீண்டது. மூன்றாவது ஆட்டத்தில் பிரணாய் வெற்றி பெற்றார். முன்னதாக, பெண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் பிவி சிந்து 16-21, 12-21 என்ற கணக்கில் சீன வீராங்கனை ஹி பிங்சாவிடம் தோல்வியடைந்து வெளியேறினார்.

தடகளம்: இந்தியாவின் மான் சிங் மாரத்தானில் 2:16:59 நேரத்தில் 8வது இடத்தைப் பிடித்தார். அதே நேரத்தில் பெண்கள் ஓட்டப்பந்தயத்தில் பெலியப்பா அப்பச்சங்கடா போ 2:20:52 நேரத்துடன் 12வது இடத்தைப் பிடித்தார்.

வில்வித்தை: ஓஜாஸ் பிரவீன், அபிஷேக் வர்மா, பிரதமேஷ் சமாதான் மூவரும் மெஸ் காம்பவுண்ட் அரையிறுதியில் சீனா தைபே அணியை 224-235 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் நுழைந்துள்ளனர். அந்த அணி இறுதிப் போட்டியில் தென் கொரியாவை எதிர்கொள்கிறது.

கபடி: ஏ பிரிவு ஆட்டத்தில் ஆடவர் அணி 50-27 என்ற புள்ளி கணக்கில் சீன தைபே அணியை வீழ்த்தியது.

மேலும் படிக்க - Asian Games 2023: வரலாறு படைத்த இந்தியா! இதுவரை இல்லாத அளவுக்கு பதக்க எண்ணிக்கை

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News