INDvsAUS: 2_வது T20 போட்டி: ஆஸ்திரேலியாவை பழிதீர்க்குமா? இந்தியா

ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி-20 போட்டி மெல்போர்ன் மைதானத்தில் நாளை நடைபெற உள்ளது

Written by - Shiva Murugesan | Last Updated : Nov 22, 2018, 03:22 PM IST
INDvsAUS: 2_வது T20 போட்டி: ஆஸ்திரேலியாவை பழிதீர்க்குமா? இந்தியா title=

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்தியா அணி 3 டி20, 4 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. நேற்று முதல் டி20 தொடர் ஆரம்பமானது. முதல் டி20 போட்டி நேற்று இரு அணிகளுக்கு இடையேயான பிரிஸ்பென்னே கப்பா மைதானத்தில் நடைப்பெற்றது.

இப்போட்டியில் டாஸ் வென்ற இந்தியா அணி முதலில் பந்துவீச்சினை தேர்வு செய்து விளையாடியது. இதனையடுத்து களம் இறங்கிய ஆஸ்திரேலியா அணியின் வீரர்கள் அதிரடியாக விளையாடினாலும், அடுத்தடுத்து விக்கெட்டையும் பறிக்கொடுத்தனர். இதற்கிடையில் ஆட்டத்தின் 16.1 ஓவரின் போது மழை குறுக்கிட்டதால் ஆட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. மழை நின்ற பின்பு 20 ஓவர் போட்டி 17 ஓவர்களாக குறைக்கப்பட்டு ஆட்டம் தொடர்ந்தது.

17 ஓவர்களில் ஆஸ்திரேலியா 4 விக்கெட் இழப்பிற்கு 158 ரன்கள் குவித்தது. இந்தியா தரப்பில் குல்தீப் யாதவ் 2 விக்கெட்டுகளை எடுத்தார். 

இதனையடுத்து 17 ஓவர்களில் 174 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களமிறங்கியது. 16 ஓவருக்கு 161 ரன்கள் எடுத்தது. 5 விக்கெட்கள் கைவசம் உள்ள நிலையில், கடைசி 6 பந்தில் 13 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற இக்கட்டான நிலையில், கடைசி ஓவரில் இந்திய அணி வெறும் 8 ரன்கள் மட்டுமே எடுத்தது. இரண்டு விக்கெட்டும் பறிக்கொடுத்தது. 

இந்த மூலம் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக முதல் டி-20 போட்டியில் 4 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி தோல்வியை தழுவியது. மூன்று போட்டிகள் கொண்ட டி-20 தொடரில் 1-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா முன்னிலையில் உள்ளது. 

 

இந்த நிலையில் இரு அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி-20 போட்டி மெல்போர்ன் மைதானத்தில் நாளை நடைபெற உள்ளது. இந்திய நேரப்படி 1.20 மணிக்கு, இந்த போட்டி தொடங்கும்.

முதல் போட்டியில் இந்திய அணி வீரர்கள் சிறப்பாகவே செயல்பட்டனர். மழை குறுக்கிட்டதால் இந்தியாவுக்கு தோல்வி கிடைத்தது. நாளை நடைபெறும் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற கட்டாயத்தில் உள்ளது. வெற்றி பெற்றால் தொடர் 1-1 என்ற சமநிலை அடையும். தோற்றால் தொடரை இந்தியா இழக்க நேரிடும். எனவே இந்திய வீரர்கள் ஒன்றுமையாக இணைந்து தங்கள் முழு திறமையை வெளிப்படுத்துவார்கள் என எதிர் பார்க்கப்படுகிறது.

பலவீனமான ஆஸ்திரேலியா அணியை வீழ்த்துவது சிரமமான காரியம் இல்லை. விராத், ரோஹித் நிலைத்து நின்று ஆடும் பட்சத்தில், அடுத்த டி20 போட்டியில் இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு தக்க பதிலடி கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

 

Trending News