IND vs AUS: சென்னையில் ஆதிக்கம் செலுத்தும் ஆஸ்திரேலியா! இந்திய முறியடிக்குமா?

சென்னையில் இரு அணிகளும் இதுவரை ஆடிய மூன்று போட்டிகளிலும் ஆஸ்திரேலிய அணியே அதிக வெற்றிகளை பெற்றுள்ளது. 2 ஆட்டங்களில் ஆஸ்திரேலியா வெற்றியும், ஒரு போட்டியில் இந்தியாவும் வெற்றி பெற்றுள்ளது.  

Written by - S.Karthikeyan | Last Updated : Oct 8, 2023, 09:25 AM IST
  • உலக கோப்பை இந்தியா - ஆஸ்திரேலியா மோதல்
  • பிற்பகலில் பகலிரவு போட்டியாக நடக்கிறது
  • சென்னையில் ஆதிக்கம் செலுத்தும் ஆஸ்திரேலியா
IND vs AUS: சென்னையில் ஆதிக்கம் செலுத்தும் ஆஸ்திரேலியா! இந்திய முறியடிக்குமா? title=

உலகக் கோப்பையில் இந்திய கிரிக்கெட் அணி தனது முதல் போட்டியை ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 8) தொடங்குகிறது. ஐந்து முறை சாம்பியனான ஆஸ்திரேலியாவை சென்னையில் உள்ள எம்ஏ சிதம்பரம் மைதானத்தில் எதிர்கொள்கிறது. 13வது உலகக் கோப்பையில் கங்காருக்கள் விளையாடும் முதல் போட்டி இதுவாகும். அதேபோல் கேப்டன்களாக ரோஹித் சர்மா மற்றும் பாட் கம்மின்ஸ் களமிறங்கும் முதல் உலக கோப்பையும் கூட. அதனால் இரு அணிகளும் வெற்றியுடன் தொடங்கும் முனைப்பில் உள்ளன.

சென்னையில் இரு அணிகள் மோதும் நான்காவது ஒருநாள் போட்டி நடைபெறவுள்ளது. இதுவரை ஆடிய மூன்று போட்டிகளிலும் ஆஸ்திரேலிய அணியே முன்னிலை பெற்றுள்ளது. இதில் 2 ஆட்டங்களில் ஆஸ்திரேலியா வெற்றியும், ஒரு போட்டியில் இந்தியாவும் வெற்றி பெற்றுள்ளது. உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியை பொறுத்த வரையில் சென்னையில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான இரண்டாவது போட்டி இது. இதற்கு முன் 1987ல் இரு அணிகளும் நேருக்கு நேர் மோதின. அந்த போட்டியில் ஆஸ்திரேலியா அணி ஒரு ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

உலகக் கோப்பையில் இரு அணிகள் மோதும் 13வது போட்டி

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உலகக் கோப்பையில் இந்தியா இதுவரை 4 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. அதே சமயம் எட்டு முறை தோல்வியை சந்தித்துள்ளது. நான்கு வெற்றிகளைப் பற்றி பேசுகையில், இந்தியா 1983, 1987, 2011 மற்றும் 2019-ல் ஐந்து முறை சாம்பியன் அணியை தோற்கடித்துள்ளது. 2003 உலகக் கோப்பையின் இறுதிப் போட்டியும், 2015 உலகக் கோப்பையின் அரையிறுதிப் போட்டியும் இருவருக்கும் இடையே நடந்தன. இரண்டு போட்டிகளிலும் இந்திய அணி தோல்வியை சந்திக்க வேண்டியிருந்தது.

மேலும் படிக்க | தெறிக்கவிட்ட தென்னாப்பிரிக்கா - உலகக் கோப்பையில் அதிகபட்ச ஸ்கோர்... முரட்டுத்தனமான 3 சதங்கள்!

உலகக் கோப்பையில் இந்தியா - ஆஸ்திரேலியா போட்டி எப்போது நடைபெறும்?

இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான ஆட்டம் ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 8) நடைபெறுகிறது.

உலகக் கோப்பையில் இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான ஆட்டம் எங்கு நடைபெறும்?

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் ஆட்டம் சென்னை எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்றது.

உலகக் கோப்பையில் இந்தியா - ஆஸ்திரேலியா போட்டி எப்போது தொடங்கும்?

இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான ஆட்டம் இந்திய நேரப்படி பிற்பகல் 2 மணிக்கு தொடங்குகிறது. இதற்கு அரை மணி நேரத்திற்கு முன் அதாவது மதியம் 1:30 மணிக்கு டாஸ் போடப்படும்.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா போட்டியை எந்த டிவி சேனலில் பார்க்கலாம்?

இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க்கில் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது. ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்களில் ரசிகர்கள் வெவ்வேறு மொழிகளில் போட்டியை ரசிக்கலாம். DD Free Dish-ஐப் பயன்படுத்தும் பார்வையாளர்கள் DD Sports-ல் போட்டியை இலவசமாகப் பார்க்க முடியும்.

உலகக் கோப்பையில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா போட்டியின் நேரடி ஒளிபரப்பு எங்கே கிடைக்கும்?

டிஸ்னி + ஹாட்ஸ்டார் செயலியில் உலகக் கோப்பை போட்டிகளை ஆன்லைனில் பார்க்கலாம். மொபைலில் போட்டியை இலவசமாகப் பார்க்கலாம். மடிக்கணினி அல்லது ஸ்மார்ட் டிவியில் பார்க்க, நீங்கள் பணம் செலுத்தி சந்தா செலுத்த வேண்டும். 

உலகக் கோப்பைக்கான இரு அணிகள் பிளேயிங் லெவன்: 

ஆஸ்திரேலியா: பாட் கம்மின்ஸ் (கேப்டன்), ஸ்டீவ் ஸ்மித், அலெக்ஸ் கேரி, ஜோஷ் இங்கிலிஸ், ஷான் அபோட், கேமரூன் கிரீன், ஜோஷ் ஹேசில்வுட், டிராவிஸ் ஹெட், மார்னஸ் லாபுசாக்னே, மிட்செல் மார்ஷ், கிளென் மேக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டோனிஸ், டேவிட் வார்னர், ஆடம் ஜம்பா, மிட்செல் ஸ்டார்க்.

இந்தியா: ரோஹித் சர்மா (கேப்டன்), ஹர்திக் பாண்டியா (துணை கேப்டன்), சுப்மன் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல், ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ், குல்தீப் யாதவ், முகமது ஷமி, ரவிச்சந்திரன் அஷ்வின், இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ்.

மேலும் படிக்க | IND vs AUS: இந்திய அணியின் பிளேயிங் லெவனில் அஸ்வின் ஏன் இடம்பெறுவார்? 6 காரணங்கள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News