India Vs Bangladesh: அடுத்த ஆண்டு 50 ஓவர் உலகக் கோப்பை இந்தியாவில் நடைபெற உள்ளது. இதற்கு முன்னதாக இந்திய அணி மிகவும் பலவீனமாக உள்ளது. வங்கதேசத்திற்கு எதிரான ஒரு நாள் தொடரை 2-1 என்ற கணக்கில் தோல்வியுற்ற பிறகு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. புதன்கிழமை முதல் டெஸ்ட் போட்டியில் வங்காளதேசத்தை இந்தியா எதிர்கொள்கிறது. இந்த தொடரில் வெற்றி பெற்றால் மட்டுமே உலக டெஸ்ட் சாம்பியன் சிப் போட்டிக்கு தகுதி பெற முடியும். கேப்டன் ரோஹித் ஷர்மா காயத்தால் வெளியேறியதால் கேஎல் ராகுல் கேப்டனாக பொறுப்பேற்கிறார். வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி மற்றும் ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் தொடரில் பங்கேற்கவில்லை.
ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் இந்தியா விளையாடிய 12 போட்டிகளில் 6-ல் வெற்றி பெற்று ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா மற்றும் இலங்கைக்கு பின் நான்காவது இடத்தில் உள்ளது. தற்போதைய சுழற்சி ஜூலை 2021 முதல் ஜூன் 2023 வரை நடைபெறும். ஒவ்வொரு அணியும் மூன்று சொந்த தொடர் மற்றும் மூன்று வெளிநாட்டு தொடரில் விளையாடும். முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் இறுதிப் போட்டியில் மோதும். வங்கதேசம் 10 ஆட்டங்களில் ஒரு வெற்றி மற்றும் ஒரு டிராவுடன் கடைசி இடத்தில் உள்ளது. பிப்ரவரி 2020 க்குப் பிறகு அவர்கள் சொந்த மண்ணில் ஒரு டெஸ்டையும் வென்றதில்லை மற்றும் டெஸ்டில் எங்கும் இந்தியாவை வென்றதில்லை.
மேலும் படிக்க | இப்படி ஒரு இக்கட்டான நிலையில் இந்திய அணி! என்ன செய்யப்போகிறது பிசிசிஐ?
இரண்டாவது ஒருநாள் போட்டியில் ரோஹித்தின் கட்டை விரலில் காயம் ஏற்பட்டதால், டாக்காவில் நடைபெறும் இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான அவரது உடற்தகுதி குறித்து பின்னர் முடிவு எடுப்பதாக இந்திய கிரிக்கெட் வாரியம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது. முதல் டெஸ்டில் சேட்டேஷ்வர் புஜாரா துணை கேப்டனாக செயல்பட உள்ளார். ரோஹித்துக்கு பதிலாக அபிமன்யு ஈஸ்வரன் சேர்க்கப்பட்டார். ஷமி (தோள்பட்டை காயம்) மற்றும் ஜடேஜா (முழங்காலில்) ஆகியோருக்கு பதிலாக வலது கை வேகப்பந்து வீச்சாளர் நவ்தீப் சைனி மற்றும் இடது கை சுழற்பந்து வீச்சாளர் சவுரப் குமார் ஆகியோர் அணியில் இடம் பெற்றுள்ளனர். 2010ல் தனது ஒரே டெஸ்டில் விளையாடிய இடது கை வேகப்பந்து வீச்சாளர் ஜெய்தேவ் உனட்கட்டும் 17 பேர் கொண்ட அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
Covering all bases, #TeamIndia trained in Chattogram ahead of our 1st Test against Bangladesh.
Snapshots from our training session #BANvIND pic.twitter.com/xh6l9rdhYu
— BCCI (@BCCI) December 12, 2022
பங்களாதேஷ் அணி: மஹ்முதுல் ஹசன், நஜ்முல் ஹொசைன், மொமினுல் ஹக், யாசிர் அலி, முஷ்பிகுர் ரஹீம், ஷாகிப் அல் ஹசன் (கேப்டன்), லிட்டன் தாஸ், நூருல் ஹசன், மெஹிதி ஹசன் மிராஸ், தைஜுல் இஸ்லாம், தஸ்கின் அகமது, காலித் அகமது, எபாடோட் ஹொசைன், ஷோக்ரி ஹொசைன், ஹசன், ரெஜவுர் ரஹ்மான் ராஜா, அனாமுல் ஹக்.
இந்தியா: கே.எல்.ராகுல் (கேப்டன்), ஷுப்மன் கில், சேதேஷ்வர் புஜாரா, விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பந்த், கே.எஸ்.பாரத், ரவிச்சந்திரன் அஷ்வின், அக்சர் படேல், குல்தீப் யாதவ், ஷர்துல் தாக்கூர், முகமது சிராஜ், உமேஷ் யாதவ், அபிமன்யு ஈஸ்வரன், சௌரப் குமார், ஜெய்தேவ் உனத்கட்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ