இந்தியா vs இங்கிலாந்து: பரபரப்பான கடைசி நாள் ஆட்டம் இன்று

364 ரன்கள் அடித்து வலுவான நிலையில் முதல் இன்னிங்சை முடிந்தது இந்திய அணி. 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Aug 16, 2021, 11:10 AM IST
இந்தியா vs இங்கிலாந்து: பரபரப்பான கடைசி நாள் ஆட்டம் இன்று title=

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஐந்தாவது மற்றும் கடைசி நாளான இன்று இந்திய அணி இக்கட்டான நிலையில் உள்ளது. 

இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி 5 டெஸ்ட் (IND vs ENG) போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முதல் போட்டியில் ஐந்தாம் நாள் மழையின் காரணமாக போட்டி டிரா செய்யப்பட்டது. இதனையடுத்து ஆகஸ்ட் 12ஆம் தேதி 2வது டெஸ்ட் போட்டி தொடங்கியது. இந்திய அணியில் ஷர்துல் தாகூர் க்கு பதிலாக இஷாந்த் ஷர்மா அணியில் சேர்க்கப்பட்டார்.

ALSO READ | Proud Movement: உலக வில்வித்தை இளைஞர் சாம்பியன்ஷிப்பில் இந்தியாவுக்கு 8 தங்கம் உட்பட 15 பதக்கங்கள்

டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் பீல்டிங்கை தேர்வு செய்தார். முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியின் தொடக்க வீரர்கள் ரோகித் சர்மா மற்றும் கே எல் ராகுல் மிகச் சிறப்பாக ஆடினர். முதல் விக்கெட் பார்ட்னர்ஷிப் சாதனை, இங்கிலாந்து மண்ணில் சதம் அடித்தது என பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார். 364 ரன்கள் அடித்து வலுவான நிலையில் முதல் இன்னிங்சை முடிந்தது இந்திய அணி. 

பின் ஆடிய இங்கிலாந்து அணி வீரர்களும் சிறப்பாக ஆடினார். இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட் 180 ரன்கள் அடித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். 391 ரன்களுக்கு இங்கிலாந்து அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. 27 ரன்கள் பின்தங்கிய நிலையில் ஆடிய இந்திய அணிக்கு தொடக்கத்திலிருந்தே அதிர்ச்சிகள் காத்திருந்தது. முதல் இன்னிங்சில் சதம் அடித்த கே எல் ராகுல் இரண்டாவது இன்னிங்சில் 5 ரன்களுக்கு வெளியேறினார். விராட் கோலி (Virat Kohli) சர்மா என அடுத்தடுத்து விக்கெட்டுகள் போனது. பின்பு புஜாரா மட்டும் ரகானே ஜோடி. மிகவும் பொறுமையாக ஆடி விக்கெட்டுகளை இழக்காமல் இருந்தது. புஜாரா 206 பந்துகள் பிடித்து 45 ரன்கள் எடுத்திருந்தார். ரகானே 146 பந்துகளுக்கு 61 ரன்கள் எடுத்திருந்தார்.

அடுத்தடுத்து விக்கெட்டுகள் விழ நான்காம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 181 ரன்கள் எடுத்துள்ளது. 154 ரன்கள் அதிகமாக அடித்துள்ள நிலையில் இன்று நடக்கும் கடைசி நாள் ஆட்டத்தில் 250 முதல் 300 ரன்கள் டார்கெட் ஆக இங்கிலாந்து அணிக்கு வைக்கும் பட்சத்தில் இந்த போட்டியை டிராவில் முடியும். இங்கிலாந்து அணி வீரர்கள் சிறப்பாக பந்து வீசும் பட்சத்தில் இந்திய அணியை சீக்கிரமே அவுட்டாகி இரண்டாவது டெஸ்ட் போட்டியை இங்கிலாந்து அணி வெல்ல அதிக வாய்ப்புள்ளது. இதனால் இன்றைய போட்டி மிகவும் கடுமையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ALSO READ | இலங்கையை வீழ்த்தி ஒருநாள் தொடரை வென்றது இந்தியா

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News