India Tour of Sri Lanka: இலங்கை சென்றுள்ள இந்திய அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டியில் வென்ற இந்தியா 1-0 என தொடரில் முன்னிலையில் இருந்தது. இரு அணிகள் மோதிய இரண்டாவது போட்டி நேற்று கொழும்புவில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தனர்.
இலங்கை அணிக்கு அவிஷ்கா, மினோத் ஜோடி நல்ல துவக்கம் கொடுத்தது. முதல் விக்கெட்டுக்கு 77 ரன்கள் சேர்த்த போது, தனது நான்காவது ஓவரை வீசிய சகால் திருப்பம் தந்தார். இதில் 3வது பந்தில் பனுகா அவுட்டாக்கினார். அவிஷ்கா, ஒருநாள் அரங்கில் 4வது அரைசதம் எட்டினார். இவரை புவனேஷ்வர் குமார் அவுட்டாக்கி அனுப்பி வைத்தார்.
Also Read | MS Dhoni-யால் இந்த 5 வீரர்களின் கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வந்ததா?
மறுபக்கம் தனஞ்செயா டி சில்வா 32 ரன்கள் எடுத்த நிலையில், தீபக் சகார் அவுட்டானார். இதில் ஷனாகா 16 ரன்கள், ஹசரங்கா 8 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். அசலங்கா அரைசதம் கடந்தார். இவர் 65 ரன்கள் எடுத்த போது, புவனேஷ்வரிடம் அவுட்டானார். கடைசி நேரத்தில் கருணாரத்னே 33 பந்தில் 44 ரன்கள் சேர்த்தார். இலங்கை அணி 50 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 275 ரன்கள் எடுத்தது. இந்திய அணி சார்பில் புவி, சஹல் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
இதையடுத்து, 276 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களம் இறங்கியது. கடந்த போட்டியில் அசத்திய பிரித்வி ஷா 13 ரன்கள் எடுத்து முதலில் அவுட் ஆனார், ஷிகர் தவான் (29), இஷான் கிஷன் (1) சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். 12 ஓவரில் இந்தியா 65 ரன்கள் எடுத்து இருந்தது. 4-வது விக்கெட்டுக்கு மணீஷ் பாண்டே உடன் சூர்யகுமார் யாதவ் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி சிறப்பாக விளையாடி 50 ரன்கள் சேர்த்தது.
மணீஷ் பாண்டே 37 ரன்னில் ஆட்டமிழந்தார். அரை சதமடித்த சூர்யகுமார் யாதவ் 53 ரன்னில் வெளியேறினார். ஹர்திக் பாண்ட்யா டக் அவுட்டானார். க்ருணால் பாண்ட்யா 35 ரன்னில் பெவிலியன் திரும்பினார். 8வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த தீபக் சாஹர், புவனேஷ்வர் குமார் ஜோடி நிதானமாக ஆடியது. சாஹர் 66 பந்துகளில் அரை சதமடித்தார். இறுதியில், இந்தியா 7 விக்கெட் இழப்புக்கு 277 ரன்களை எடுத்து அபார வெற்றி பெற்றது. அத்துடன் ஒருநாள் தொடரை 2-0 என கைப்பற்றியது.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR