முதல் டி20: இந்தியா வெற்றி பெற காரணம் என்ன?

Last Updated : Nov 2, 2017, 12:28 PM IST
முதல் டி20: இந்தியா வெற்றி பெற காரணம் என்ன? title=

இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி 3 ஒரு நாள் போட்டி மற்றும் 3 டி-20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. ஏற்கனவே நடந்து முடிந்த 3 போட்டிக்கொண்ட ஒருநாள் தொடரை இந்தியா 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.

இந்தியா- நியூசிலாந்து அணிகள் இடையேயான டி-20 போட்டிகள் கொண்ட தொடர் நேற்று தொடங்ககியது. முதல் டி-20 போட்டி டெல்லி புரோஜ் ஷா கோட்லா மைதானத்தில் நேற்று இரவு 7 மணிக்கு தொடங்கியது. மேலும் இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஆஷிஷ் நேஹ்ராவின் கடைசி சர்வதேச போட்டி என்பது குறிப்பிடத்தக்கது.

டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனால் இந்திய அணி தனது பேட்டிங்கை தொடங்கியது. தொடக்க வீரர்களான ஷிகர் தவான், ரோகித் ஷர்மா இருவரும் ஆரம்ப முதலே அதிரடி காட்டினர். நியூசிலாந்து அணி பந்துகளை சிக்சர், பவுண்டரி என பறக்க விட்டனர். முதல் விக்கெட் 16.2 வது ஓவரில் 158 ரன்களை எடுத்து இருந்த போது ஷிகர் தவான் 80 ரன்களில் அவுட் ஆனார் அடுத்து வந்த ஹர்திக் பாண்டியா டக்-அவுட் ஆனார்.

பின்னர் வந்த இந்திய கேப்டன் விராட் கோலி அதிரடியாக விளையாடினார். 8.6 வது ஒவரில் இந்தியா 185 ரன்கள் எடுத்து இருந்த போது ரோகித் சர்மா 80 ரன்களில் அவுட் ஆனார். அடுத்து களம் இறங்கிய முன்னால் கேப்டன் எம் எஸ் டோனி முதல் பந்திலேயே சிக்சர் அடுத்தார். 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்கள் இழப்பிற்கு 202 ரன்கள் எடுத்தது.

அடுத்து களம் இறங்கிய நியூசிலாந்து அணி இறுதியில், அந்த அணி 8 விக்கெட்டுகளை இழந்து 149 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் இந்தியா 53 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் டி-20 தொடரில் 1-0 என கணக்கில் இந்தியா முன்னிலை வகிக்கிறது.

Trending News