இன்று இந்தியா- நியூசிலாந்து மோதும் முதல் டி20!!

Last Updated : Nov 1, 2017, 09:58 AM IST
இன்று இந்தியா- நியூசிலாந்து மோதும் முதல் டி20!!  title=

இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி 3 ஒரு நாள் போட்டி மற்றும் 3 டி-20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. ஏற்கனவே நடந்து முடிந்த 3 போட்டிக்கொண்ட ஒருநாள் தொடரை இந்தியா 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.

இந்தியா- நியூசிலாந்து அணிகள் இடையேயான டி-20 போட்டிகள் கொண்ட தொடர் இன்று முதல் தொடங்குகிறது. முதல் டி-20 போட்டி டெல்லி புரோஜ் ஷா கோட்லா மைதானத்தில் இன்று நடைபெறுகிறது.

நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரை வென்று உள்ள இந்திய அணி டி-20 தொடரையும் வெல்லும் ஆர்வத்தில் உள்ளது. அதேவேளையில், ஒருநாள் தொடரை இழந்த நியூசிலாந்து அணி டி-20 தொடரையும் வெல்ல தங்களை தயார் படுத்தி வருகிறது. எனவே டி-20 போட்டி விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.

அதேவேளையில், இந்தியாவிற்கு எதிராக நியூசிலாந்து விளையாடிய 6 போட்டிகளில் 5 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஒரு போட்டி மழையால் கைவிடப்பட்டுள்ளது. 

டி-20 போட்டி இன்று இரவு 7 மணிக்கு தொடங்குகிறது. இந்தப்போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது.

Trending News