2007 ஆம் ஆண்டு நடைபெற்ற 20 ஓவர் உலகக்கோப்பையை கிரிக்கெட் ரசிகர்கள் எளிதில் மறந்துவிடமாட்டார்கள். அந்த தொடரில் இந்தியா - பாகிஸ்தான் மோதிய இரண்டு ஆட்டங்களும் கிரிக்கெட் போட்டியின் சுவாரஸ்யத்தின் உட்சமாக இன்றும் பார்க்கப்படுகிறது. லீக் போட்டியில் மோதிய இந்தியா - பாகிஸ்தான் மேட்ச் மிகப்பெரிய பரபரப்புக்கு இடையே டையானது. பின்னர் பவுல் அவுட் முறையில் இந்தியா வெற்றி பெற்றது.
ALSO READ | பிசிசிஐ-க்கு கடும் கண்டனம் தெரிவித்த ரவி சாஸ்திரி! இதான் காரணம்!
இதேபோல் பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் நடைபெற்ற இறுதிப் போட்டியிலும், பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா வாகை சூடியது. ஆனால், அந்தப் போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி பெறும் என்றே அனைவரும் எதிர்பார்த்திருந்தனர். ஏனென்றால், பாகிஸ்தான் அணியின் அப்போதைய கேப்டனாக இருந்த மிஸ்பா உல் ஹக் கடைசி வரை களத்தில் இருந்து விளையாடினார். வெற்றிக்கு மிக அருகில் பாகிஸ்தானை அழைத்துச் சென்ற அவர், கடைசியில் ஸ்கூப் ஷாட் ஆடி ஸ்ரீசாந்த் கையில் கேட்ச் என்ற முறையில் அவுட்டானார். இதன்மூலம் 20 ஓவர் முதல் உலகக் கோப்பையை வென்று தோனி தலைமையிலான இளம் இந்திய அணி சாதனை படைத்தது.
அந்த ஷாட் குறித்து இப்போது மனம் திறந்து பேசியிருக்கும் மிஸ்பா உல் ஹக், " 2007-ல் அதுபோன்ற ஸ்கூப் ஷாட் விளையாடி நிறைய பவுண்டரிகள் அடித்திருக்கிறேன். ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஆட்டத்தில்கூட அந்தமாதிரியான ஷாட்களை அடித்தேன். தன்னம்பிக்கையுடன் தொடர்ந்து அந்த ஷாட் விளையாடிக் கொண்டிருந்த எனக்கு, அன்றைய தினம் அதீத நம்பிக்கையில் ஆடிய தவறான ஷாட்டாக மாறிவிட்டது. இதேபோல், 2011 ஆம் ஆண்டு உலக கோப்பை அரையிறுதிப் போட்டியிலும் நான் ஒருவன் மட்டுமே களத்தில் இருந்து விளையாடும் நிலை ஏற்பட்டது. எதிர்முனையில் சரியான மற்றொரு இணை கிடைக்கவில்லை. இதனால் அப்போதும் இந்தியாவுக்கு எதிராக தோல்வியை சந்திக்க நேரிட்டது" எனத் தெரிவித்துள்ளார்.
ALSO READ | சிறுமிகளின் ’பாட்டில்’ கிரிக்கெட்டுக்கு பரிசாக வந்த பேட்..!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR