ஆஸ்திரேலியாவின் கேன்பெரா மைதானத்தில் ஆஸ்திரேலியா - இங்கிலாந்து பெண்கள் அணிகளுக்கு இடையிலான ஒரே ஒரு ஆஷஸ் டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. டாஸ் வெற்றி பெற்ற இங்கிலாந்து பெண்கள் அணி பந்துவீச்சை தேர்ந்தெடுக்க ஆஸ்திரேலிய அணி பேட்டிங் செய்தது. முதல் இன்னிங்ஸில் அந்த அணி 339 ரன்கள் குவித்து டிக்ளோர் செய்தது. இதனைத் தொடர்ந்து விளையாடிய இங்கிலாந்து அணி 297 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
ALSO READ | U-19 WorldCup: காலிறுதியில் மோதும் இந்தியா மற்றும் வங்கதேசம்!
பின்னர் 2வது இன்னிங்ஸை ஆஸ்திரேலியா அணி விளையாடி வருகிறது. 3வது நாளான இன்று ஆட்டம் நடைபெறும்போது மழை குறுக்கிட்டது. இதனால், சிறிது நேரம் ஆட்டம் பாதிக்கப்பட்டதால், போட்டியைக் காண வந்திருந்த சிறுமிகள் பாட்டிலை வைத்து மைதானத்தின் கேலரியில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தனர்.
This is a beautiful gesture from Mel Jones - few kids were playing cricket with bottles during a rain delay and then Mel Jones gifted them a new bat. pic.twitter.com/I6LWohp57m
— Johns. (@CricCrazyJohns) January 29, 2022
இதனைப் பார்த்த ஆஸ்திரேலிய முன்னாள் வீராங்கனை மெல் ஜோன்ஸ் (Mel Jones) மற்றும், எரிக் ஓஸ்போர்ன் (Erin Osborne) ஆகியோர் சிறுமிகள் கிரிக்கெட் விளையாடிய இடத்துக்கு சென்றனர். அப்போது அவர்களுக்கு சர்ப்பிரைஸாக புதிய பேட் ஒன்றை பரிசளித்த அவர்கள், சிறுமிகளுடன் இணைந்து சிறிது நேரம் கிரிக்கெட் விளையாடினர். பாட்டில் கிரிக்கெட் விளையாடிய சிறுமிகளுக்கு ஆஸ்திரேலிய வீராங்கனை புதிய பேட் வழங்கிய இந்த வீடியோ இப்போது வைரலாகியுள்ளது.
ALSO READ | பிசிசிஐ-க்கு கடும் கண்டனம் தெரிவித்த ரவி சாஸ்திரி! இதான் காரணம்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR