3வது ஒரு நாள் போட்டி: இலங்கை அணி பேட்டிங்

Last Updated : Aug 27, 2017, 02:21 PM IST
3வது ஒரு நாள் போட்டி: இலங்கை அணி பேட்டிங் title=

இலங்கை அணிக்கு எதிரான 3-வது ஒரு நாள் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார். 

இந்தியா - இலங்கை அணிகள் மோதும் 3-வது ஒருநாள் போட்டி, பல்லெகலே சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியத்தில் இன்று தொடங்குகிறது. 

இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, முதலில் நடந்த டெஸ்ட் தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றி சாதனை படைத்தது. 

அடுத்து இரு அணிகளும் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் போட்டித் தொடரில் மோதுகின்றன.

இன்றைய போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால் தொடரை கைப்பற்றும் என்பதால் இப்போட்டி ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 

5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் இந்திய அணி 2-0 என முன்னிலை வகிப்பது குறிப்பிடத்தக்கது.

Trending News