மேற்கிந்திய அணிக்கு எதிரான இந்திய ஒருநாள் அணி அறிவிப்பு!

இந்தியா - மேற்கிந்திய அணிகளுக்கு இடையே நடைபெறவுள்ள கடைசி மூன்று ஒருநாள் போட்டிகளில் பங்கேற்கும் 15 வீரர்களின் பெயர் பட்டியல் வெளியாகியுள்ளது!

Updated: Oct 25, 2018, 05:10 PM IST
மேற்கிந்திய அணிக்கு எதிரான இந்திய ஒருநாள் அணி அறிவிப்பு!

இந்தியா - மேற்கிந்திய அணிகளுக்கு இடையே நடைபெறவுள்ள கடைசி மூன்று ஒருநாள் போட்டிகளில் பங்கேற்கும் 15 வீரர்களின் பெயர் பட்டியல் வெளியாகியுள்ளது!

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மேற்கிந்தியா அணி 2 டெஸ்ட், 5 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகின்றது. முன்னதாக இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் 2-0 என்ற கணக்கில் இந்தியா தொடரை வென்றது.

இதைத்தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கு இடையே ஒருநாள் தொடர் தற்போது நடைப்பெற்று வருகிறது. இத்தொடரின் முதல் போட்டியில் இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது எனினும் நேற்று நடைப்பெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டி முடிவு இன்றி ட்ராவில் முடிவடைந்தது. 

இந்நிலையில் மீதமுள்ள 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடும் வீரர்களின் பட்டியலினை BCCI அறிவித்துள்ளது. இப்பட்டியலில் புவனேஷ்வர் குமார் மற்றும் பூம்ரா இடம்பிடித்துள்ளனர். முன்னதாக நடைப்பெற்ற இரண்டு போட்டிகளில் ஓய்வு பெற்றிருந்த இவ்விருவரும் அடுத்து நடைபெறவுள்ள போட்டிகளில் பங்கேற்கவுள்ளனர்.

இந்த பட்டியலின்படி மீதமுள்ள 3 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்கும் அணியில்... கோலி, ரோகித் ஷர்மா, ஷிகர் தவான், அம்பத்தி ராயுடு, MS டோனி, ரிசாப் பன்ட், ரவிந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், சாஹல், புவனேஷ்வர் குமார், ஜாஸ்பிரிட் பூம்ரா, கலீல் அகமது, உமேஷ் யாதவ், KL ராகுல் மனிஷ் பாண்டே பங்கேற்பர் என அறிவிக்கப்பட்டுள்ளது.

5 ஒருநாள் போட்டி கொண்ட இத்தொடரின் முதல் போட்டி கடந்த அக்டோபர் 21 துவங்கி அக்டோபர் 24, அக்டோபர் 27, அக்டோபர் 29 மற்றும் நவம்பர் 1 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது.