தென் ஆப்பிரிக்கா சுற்று பயணம் விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 3 டெஸ்ட், 6 ஒருநாள் போட்டி மற்றும் மூன்று 20 ஓவர் போட்டிகள் என தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக விளையாட உள்ளது.
இந்நிலையில், இன்று முதல் டெஸ்ட் போட்டி 2 மணி அளவில் தொடங்கியது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடியது. புவனேஸ்வர் குமார் தனது முதல் ஓவரிலேயே டீன் எல்கர்(0) அவுட் செய்தார். தனது இரண்டாவது ஓவரில் ஐடின் மார்கரம் 5(11), மூன்றாவது ஓவரில் ஹஷிம் ஆம்லா 3(10) அவுட் செய்தார். 12 ரன்களுக்கு 3 விக்கெட் இழந்து தடுமாறியது தென் ஆப்ரிக்க அணி. பின்னர் தென் ஆப்பிரிக்கா அணியின் கேப்டன் டுபிளெஸ்ஸிஸ் மற்றும் ஏ.பி.டிவில்லியர்ஸ் நிதானமா விளையாடினர்.
73.1 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் தென் ஆப்பிரிக்கா அணி முதல் இன்னிங்ஸில் 286 ரன்கள் எடுத்துள்ளது. இந்திய தரப்பில் புவனேஷ்வர் குமார் நான்கு விக்கெட்டும், அஸ்வின் 2 விக்கெட்டும், ஷமி, பும்ராஹ் மற்றும் பாண்டியா தலா ஒரு விக்கெட்டும் எடுத்தனர்.
Innings Break! South Africa all out for 286 runs.
Updates - https://t.co/XYC5wpnAmX #FreedomSeries #SAvIND pic.twitter.com/XUDejWE30T
— BCCI (@BCCI) January 5, 2018
இந்தியா தனது இரண்டாவது இன்னிங்ஸ் ஆட உள்ளது.