ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 டி20, 4 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் கொண்ட தொடரில் விளையாடி வருகின்றது. முன்னதாக டி20 தொடர் 1-1 என சமநிலையில் முடிந்தது. இதைத்தொடர்ந்து தற்போது டெஸ்ட் தொடர் நடைப்பெற்று வருகின்றது.
இத்தொடரின் முதல் போட்டியில் இந்தியா 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியும், இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா அணியும் வெற்றி பெற்றது. இதன்மூலம் டெஸ்ட் தொடரில் இருஅணிகளும் 1-1 என்ற கணக்கில் சமநிலை பெற்றுள்ளது.
இந்தநிலையில் இருஅணிகளுக்கும் இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி நாளை டிசம்பர் 26 ஆம் தேதி மெல்பர்னில் துவங்க உள்ளது. பாக்சிங் டே டெஸ்ட் எனப்படும் மூன்றாவது போட்டியில் வெற்றி பெரும் அணி தொடரில் முன்னிலை பெரும். எனவே நாளை நடைபெறும் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி சார்பில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. அஸ்வினுக்கு ஏற்ப்பட்ட காயம் இன்னும் சரியாக நிலையில், அவர் இந்த போட்டியில் விளையாட மாட்டார். தொடர்ந்து சொதப்பி வந்த இந்திய அணி தொடக்க வீரர்களான கே.எல்.ராகுல், முரளி விஜய் இருவரும் அதிரடியாக அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு பதிலாக மயங்க் அகர்வால், ஹனுமா விஹாரி சேர்க்கப்பட்டு உள்ளனர். மயங்க் அகர்வாலுக்கு முதல் முறையாக வாய்ப்பு கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தொடக்க வீரர்களாக ஹனுமா விஹாரியும், மயங்க் அகர்வாலம் களமிறங்க உள்ளனர். ரோஹித் சர்மா மீண்டும் அணிக்கு திரும்பி உள்ளதால் அணிக்கு கூடுதல் பலம் சேர்ந்துள்ளது.
இதனால் பாக்சிங் டே டெஸ்ட் போட்டியை வெல்ல இந்தியாவுக்கு நல்ல சந்தர்ப்பம் உள்ளது என ரசிகர்கள் அதிகம் எதிர்பார்க்கின்றனர்.
இந்திய அணி: விராட் கோலி(கேப்டன்), மயங்க் அகர்வால், ஹனுமா விஹாரி, சட்டீஸ்வர் புஜாரா, ரோஹித் சர்மா, ரஹானே, ரிஷ்ப் பந்த், ரவிந்திர ஜடேஜா, முகமது ஷமி, இசாந்த் சர்மா, ஜஸ்பிரித் பும்ரா.
ஆஸ்திரேலியா அணி: ஆரோன் பிஞ்ச், மார்கஸ் ஹாரிஸ், உஸ்மான் கவாஜா, ஷான் மார்ஷ், டிராவிஸ் ஹெட், மிட்ஷெல் மார்ஷ், டிம் பெய்ன், பாட் கம்மின்ஸ், மிட்ஷெல் ஸ்டார்க், நாதன் லயன், ஜோஷ் ஹேசல்வுட்.