INDvsWI: இந்திய அணி 3-1 என்ற கணக்கில் ஒருநாள் தொடரை கைப்பற்றியது

கடைசி மற்றும ஐந்தாவது போட்டியில் மேற்கிந்திய அணி 104 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. இந்தியா வெற்றி பெற 105 ரன்கள் தேவை.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Nov 1, 2018, 06:30 PM IST
INDvsWI: இந்திய அணி 3-1 என்ற கணக்கில் ஒருநாள் தொடரை கைப்பற்றியது title=

இந்த வெற்றி மூலம் மேற்கிந்திய தீவு அணிக்கு எதிரான 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி 3-1 என்ற கணக்கில் ஒருநாள் தொடரை கைப்பற்றியது. 


104 ரன்னுக்கு மேற்கிந்திய அணி ஆல்-அவுட் ஆனது. இதனையடுத்து 105 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி தனது பேட்டிங்கை தொடங்கியது. இந்திய அணி 6 ரன்கள் எடுத்த போது, தொடக்க வீரர் ஷிகர் தவான்(6) ரன்கள் எடுத்து அவுட் ஆனர். பின்னர் ரோஹித் சர்மா மற்றும் இந்திய கேப்டன் விராட் கோலி இணைந்து நன்றாக விளையாடி இந்திய அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றனர். 

14.5 ஓவரில் இந்திய அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 105 ரன்கள் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ரோஹித் சர்மா* 63(56) மற்றும் விராட் கோலி* 33(29) ரன்கள் எடுத்து கடைசி வரை அவுட் ஆகாமல் இருந்தனர்.

 

 


ஆறு ரன்களுக்கு முதல் விக்கெட்டை இழந்தது இந்தியா அணி. ஷிகார் தவான் 6 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்.

 

 


இந்தியா அபார பந்து வீச்சு; மேற்கிந்திய அணி 104 ரன்னுக்கு ஆல்-அவுட்

 

 


28.1 ஓவர் முடிவில் 94 ரன்களுக்கு மேற்கிந்திய அணி எட்டாவது விக்கெட்டை இழந்தது. 

 

 


25.2 ஓவர் முடிவில் 87 ரன்களுக்கு மேற்கிந்திய அணி ஏழாவது விக்கெட்டை இழந்தது.

 

 


20.6 ஓவர் முடிவில் 66 ரன்களுக்கு மேற்கிந்திய அணி ஆறாவது விக்கெட்டை இழந்தது.

 

 


16.6 ஓவர் முடிவில் மேற்கிந்திய அணி ஐந்து விக்கெட்டை இழந்துள்ளது. தற்போதைய நிலவரபப்டி மேற்கிந்தியா அணி 19 ஓவர் முடிவில் 62 ரன்கள் எடுத்துள்ளது.

 

 

 


13 ஓவர் முடிவில் மேற்கிந்திய அணி மூன்று விக்கெட்டை இழபுக்கு 43 ரன்கள் எடுத்துள்ளது

 

 


12 ஓவர் முடிவில் மேற்கிந்திய இரண்டு விக்கெட்டை இழபுக்கு 37 ரன்கள் எடுத்துள்ளது

 

 


கடைசி போட்டியில் விளையாடும் மேற்கிந்திய வீரர்கள்.....

 

 


கடைசி போட்டியில் விளையாடும் இந்திய வீரர்கள்.....

 

 


கடைசி மற்றும ஐந்தாவது போட்டியில் டாஸ் வென்ற மேற்கிந்திய அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்துள்ளது.

 


5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் கடைசி மற்றும ஐந்தாவது போட்டி இன்று கேரள திருவனந்தபுரம் மைதானத்தில் நடை[நடைபெற உள்ளது.

ஏற்கனவே நடந்து முடிந்த நான்கு போட்டிகளில் இந்திய அணி இரு வெற்றியும், மேற்கிந்திய ஒரு வெற்றியும், ஒரு போட்டி "டை"யில் முடிந்தது. இன்று நடைபெறும் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றால், தொடரை வெல்லும், ஒருவேளை மேற்கிந்திய அணி வெற்றி பெற்றால் 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் சமநிலையில் முடிவடையும். 

Trending News