ஐபிஎல் 2017: ஹைதராபாத் - பஞ்சாப் மோதல்!!

Last Updated : Apr 17, 2017, 08:20 PM IST
ஐபிஎல் 2017: ஹைதராபாத் - பஞ்சாப் மோதல்!!  title=

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ஹைதராபாத்தில் இன்று 8 மணிக்கு நடக்கும் போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் மற்றும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் மோதுகிறது.

இந்த ஐபிஎல் தொடரில் நடப்பு சாம்பியனான சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, முதல் 2 போட்டிகளில் பெங்களூரு மற்றும் குஜராத் அணிகளை வென்றது. ஆனால் அதன் பிறகு மும்பை மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு எதிரான ஆட்டங்களில் தோல்விகளை சந்தித்தது. தங்கள் சொந்த மண்ணில் நடக்கும் இப்போட்டியில் வென்று மீண்டும் வெற்றிப்பாதைக்கு திரும்பும் ஆர்வத்தில் அந்த அணி உள்ளது.

அதே நேரத்தில் பஞ்சாப் அணியின் மிகப்பெரிய பலமாக அதன் பேட்டிங் வரிசை கருதப்படுகிறது. இந்த அணியும் 2 போட்டிகளில் வென்று, 2 போட்டிகளில் தோல்விகளை சந்தித்து உள்ளது.

சம புள்ளியுடன் களத்தில் சந்திக்கும் இவ்விரு அணிகளின் ஆட்டம் விறுவிறுப்புக்கு குறையாமல் இருக்கும் என எதிர்பார்க்கப் படுகிறது.

டாஸ் வென்ற கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி பவுலிங்கை தேர்வு செய்துள்ளது. தற்போது சன் ரைசர்ஸ் ஹைதராபாத் தனது பேட்டிங்கை ஆடி வருகிறது.

Trending News