ஐபிஎல் 10: எலிமினேட்டர் சுற்று ஆட்டத்தில் கொல்கத்தா அணி வெற்றி

Last Updated : May 18, 2017, 12:14 PM IST
ஐபிஎல் 10: எலிமினேட்டர் சுற்று ஆட்டத்தில் கொல்கத்தா அணி வெற்றி title=

ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற தகுதி சுற்று 2 போட்டியில் கொல்கத்தா அணி குவாலிபயர் 2-க்கு முன்னேறியது.

நேற்று இரவு நடந்த பெங்களூரு சின்னச்சாமி ஸ்டேடியத்தில் எலிமினேட்டர் சுற்று ஆட்டத்தில், ஐதராபாத் சன் ரைசர்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின.

டாஸ் ஜெயித்த கொல்கத்தா அணி கேப்டன் கம்பீர் பீல்டிங்கை தேர்வு செய்தார். இதன்படி முதலில் ஆடிய ஐதராபாத் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் டேவிட் வார்னர், ஷிகர் தவான் ஆகியோர் களம் இறங்கினார்கள். நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் ஐதராபாத் அணி 7 விக்கெட் இழப்புக்கு 128 ரன்கள் எடுத்தது. 

இந்நிலையில் ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணி பேட்டிங் முடித்த நேரத்தில் ஆட்டத்தில் மழை குறுக்கிட்டது. இதனால் சுமார் 3 மணி நேரம் ஆட்டம் பாதிக்கப்பட்டது. மைதானத்தின் தன்மையையும், மழையையும் கருத்தில் கொண்டு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 6 ஓவர்களில் 48 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று அறிவிக்கப்பட்டது. 

இதனால் 48 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா அணி பேட்டிங் செய்தது. இந்த அணி 5.2 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 48 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.    

 இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றதை அடுத்து, முதல் தகுதிச்சுற்று ஆட்டத்தில் தோற்ற மும்பை இந்தியன்ஸ் அணியுடன் மோத உள்ளது. அதில் வெல்லும் அணி இறுதிச்சுற்றுக்கு முன்னேறும். இறுதிப்போட்டி ஞாயிறு அன்று நடைபெற உள்ளது. ஏற்கனவே புனே அணி இறுதிச்சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.

 

 

Trending News