ஐபிஎல் 2017: 3-வது லீக் போட்டியில் கொல்கத்தா அணி வெற்றி

Last Updated : Apr 8, 2017, 03:38 PM IST
ஐபிஎல் 2017: 3-வது லீக் போட்டியில் கொல்கத்தா அணி வெற்றி title=

10வது ஐபிஎல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி 5-ம் தேதி தொடங்கி மே 21-ம் தேதி வரை நடைபெறுகிறது. மொத்தம் 8 அணிகள் விளையாடுகின்றன.

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 10வது சீசனின் மூன்றாவது போட்டி நேற்று குஜராத் மற்றும் கொல்கத்தா அணிகள் மோதிய போட்டியில் கொல்கத்தா அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டிகளின் 10-வது சீசன் சில தினங்களுக்கு முன் துவங்கியது. பல்வேறு அணிகள் மோதும் இந்த போட்டி தொடரின் மூன்றாவது ஆட்டம் நேற்று நடைபெற்றது. 

குஜராத் மாநிலத்தின் சௌராஷ்டிரா கிரிக்கெட் அசோசியேஷன் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் குஜராத் லயன்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. போட்டியில் முதலில் ஆடிய குஜராத் லயன்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 183 ரன்களை குவித்தது. 

குஜராத் அணி சார்பில் மெக்கல்லம் 35 ரன்களும், சுரேஷ் ரெய்னா அதிரடியாக விளையாடி 51 பந்துகளில் 68 ரன்களை குவித்து ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். பின் 20 ஓவர்களில் 184 என்ற இலக்கை துரத்திய கொல்கத்தா அணி சார்பில் கௌதம் காம்பீர் மற்றும் க்ரிஸ் லின் ஆகியோர் களமிறங்கினர். 

கடின இலக்கை துரத்திய கொல்கத்தா நைட் ரைடர்ஸ்-ன் கௌதம் காம்பீர் மற்றும் க்ரிஸ் லின் துவக்கம் முதலே அதிரடியாக விளையாடி வந்தனர். கௌதம் காம்பீர் 48 பந்துகளில் 76 ரன்களையும், லின் 41 பந்துகளில் 93 ரன்களை குவித்து கொல்கத்தாவின் வெற்றியை உறுதி செய்தனர். 

இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்த இந்த ஜோடி போட்டியை 14.5 ஓவர்களிலேயே 184 ரன்களை குவித்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதிரடியாக விளையாடிய க்ரிஸ் லின் ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது.

Trending News