இன்று மாலை 4 மணிக்கு புனேவில் நடைபெறும் ஆட்டத்தில் ரைசிங் புனே சூப்பர் ஜெயன்ட் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் மோதுகின்றன.
இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெறும் அணி பிளே-ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறும். புனே அணி 13 ஆட்டத்தில் 8 வெற்றி, 5 தோல்விகளுடன் 16 புள்ளிகள் பெற்றுள்ளது. அந்த அணியின் நெட் ரன் ரேட் -0.083 ஆக உள்ளது.
பஞ்சாப் அணி 7 வெற்றி, 6 தோல்விகளுடன் 14 புள்ளிகள் பெற்று பட்டியலில் 5-வது இடத்தில் உள்ளது. ஆனால் அந்த அணியின் ரன் ரேட் +0.296 ஆகா உள்ளது. இது இந்த அணிக்கு சாதகமாக உள்ளது.
இதனால் இன்றைய ஆட்டத்தில் புனே அணி தோற்றால், பஞ்சாப் அணி ரன் ரேட் அடிப்படையில் பிளே-ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுவிடும். ஆனால் புனே அணி வெற்றி பெற்றால் எளிதாக பிளே-ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுவிடும்.
பஞ்சாப் அணி கடைசி இரு ஆட்டங்களிலும் வலுவான கொல்கத்தா, மும்பை அணிகளை வீழ்த்தி உள்ளது. புனே அணி கடைசி இரு ஆட்டங்களிலும் ஒன்று வெற்றி, ஒன்று தோல்வியை சந்தித்துள்ளது. எனவே இன்றைய ஆட்டம் ரசிகர்களுக்கு விருந்தாக அமைவதில் எந்த மாற்றமும் இல்லை.
இன்று மாலை 4 மணிக்கு நடைபெறும் இந்த போட்டியை சோனி சிக்ஸ், சோனி பிக்ஸ் தொலைக்காட்சி மூலம் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
புனே சூப்பர் ஜெயன்ட்ஸ்:
ஸ்டீவ் ஸ்மித் (கேப்டன்), தோனி, டுபிளெஸ்ஸிஸ், ஆடம் ஸம்பா, உஸ்மான் கவாஜா, அஜிங்க்ய ரஹானே, அசோக் திண்டா, அங்குஷ் பெய்ன்ஸ், ரஜத் பாட்டியா, அங்கித் சர்மா, ஈஸ்வர் பாண்டே, ஜஸ்கரன் சிங், பாபா அபராஜித், தீபக் ஷகர், மயங்க்அகர்வால், சவுரப் குமார், மிலிந்த் தாண்டன், ராகுல் திரிபாதி, மனோஜ் திவாரி, ஷர்துல் தாக்குர், இம்ரன் தகிர், பென் ஸ்டோக்ஸ், டேனியல் கிறிஸ்டியன், பெர்குசன், ஜெயதேவ் உனத்கட், ராகுல் ஷகர்.
கிங்ஸ் லெவன் பஞ்சாப்:
கிளென் மேக்ஸ்வெல்(கேப்டன்), டேவிட் மில்லர், மனன் வோரா, அக் ஷர் படேல், குர்கீரத் சிங், அனுரீத் சிங், சந்தீப் சர்மா, ஷான் மார்ஷ், விருத்திமான் சாஹா, பிரதீப் ஷாகு, ஸ்வப்னில் சிங், ஹசிம் ஆம்லா, மோர்கன், ராகுவல் டிவாட்டியா, நடராஜன், மேட்ஹென்றி, வருண் ஆரோன், மார்ட்டின் குப்தில், டேரன் சமி, ரிங்கு சிங், நிகில் நாயக், மோகித் சர்மா, மார்க்ஸ் ஸ்டோனிஸ், கே.சி.கரியப்பா, அர்மான் ஜாபர்.