மீண்டும் முதல் இடத்தை பிடிக்குமா சென்னை சூப்பர் கிங்ஸ்?...

IPL 2019 தொடரின் 50-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதுகின்றன!

Last Updated : May 1, 2019, 07:38 PM IST
மீண்டும் முதல் இடத்தை பிடிக்குமா சென்னை சூப்பர் கிங்ஸ்?... title=

07:37 PM 01-05-2019
டாஸ் வென்ற டெல்லி கேப்பிடல்ஸ் அணி முதலில் பந்து வீச்சு தேர்வு செய்துள்ளது!


IPL 2019 தொடரின் 50-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதுகின்றன!

IPL 2019 தொடரின் 50-வது லீக் ஆட்டம் இன்று சென்னை சிதம்பரம் மைதானத்தில் நடைபெறுகிறது. இப்போட்டியில் டோனி தலைமையிலான சென்னை அணியும், ஸ்ரேயஸ் ஐயர் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் மோதுகின்றன. புள்ளி பட்டியலில் முதல் இரண்டு இடத்தில் இருக்கும் அணிகள் மோதும் போட்டியில் வெற்றி பெறும் அணி மீண்டும் முதல் இடத்தை பெறும்.

தமிழகம் மற்றும் ஒட்டிய பகுதிகளில் போனி புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் இன்றைய போட்டி பிரச்சனைகள் ஏதும் இன்றி நடைபெறுமா என்பது கேள்விகுறியாய் அமைந்துள்ளது. முன்னதாக நேற்றைய போட்டியில் மழையின் குறுக்கீட்டால் பெங்களூரு மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி பாதிக்கப்பட்டது.

இப்போட்டி முடிவு இன்று முடிவடைந்த நிலையில் ப்ளே ஆப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பினை பெங்களூரு இழந்து வெளியேறியது., அதே வேலையில் ராஜஸ்தான் அணிக்கானா ப்ளே ஆப் வாய்ப்பினையும் சந்தேகத்திற்குறியதாக மாற்றியுள்ளது.

இன்றைய போட்டியை பொருத்தவரையில் சென்னை அணியில் டூப்ளசிஸ் மற்றும் ரவிந்திர ஜடேஜா முழு உடல் தகுதி பெற்று அணிக்கு திரும்புவரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. அதேவேளையில் மகேந்திர சிங் டோனி பயிற்சியின் போது இடம்பெறாத நிலையில் இன்று அவர் போட்டியில் இடம்பெற மாட்டார் என தெரிகிறது. தொடர்ந்து சுரேஷ் ரெய்னா தலைமை பொருப்பு ஏற்று அணியை வழிநடத்துவார் என தெரிகிறது.

டெல்லி அணியை பொருத்தவரையில் முந்தைய 11 பேர் குழு இன்றைய போட்டியிலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அணி முழுவதும் சந்தீப் லமிச்சனனின் ஆட்டத்தை எதிர்பார்த்துள்ளது என்றால் மிகையில்லை. 

முன்னதாக கடந்த மார்ச் 26-ஆம் நாள் இவ்விரு அணிகளுக்கும் இடையே நடைப்பெற்ற போட்டியில் சென்னை அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சென்னை அணியின் வெற்றிக்கு பழி தீர்க்கும் வகையில் டெல்லி அணியின் இன்றைய ஆட்டம் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Trending News