தொடர்ந்து இரண்டு ஆட்டங்களில் தோல்வியடைந்த பின்னர், டெல்லி கேபிடல்ஸ் அணி இந்த போட்டியில் நன்றாக விளையாட வேண்டும் என்ற முடிவில் களம் இறங்கியது.
ஆனால், அவர்களின் ஆசைக்கு மாறாக சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 88 ரன்கள் வித்தியாத்தில் வெற்றி பெற்று ப்ளே ஆஃப் சுற்றுக்கு செல்வதற்கான தங்கள் தரப்பை வலுப்படுத்திக் கொண்டது.
துபாயில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற போட்டியில் முதலில் பேட்டிங் செய்ய, ஹைதராபாத்தில் டேவிட் வார்னர் மற்றும் விருத்திம்ன் சாஹா (Wriddhimn Saha) ஆகியோர் களம் இறங்கினார்கள். இந்த இருவரும் இணைந்து 107 ரன்கள் எடுத்து அணிக்கு வலு சேர்த்தனர்.
சிறப்பாக ஆடிக் கொண்டிருந்த சாஹா சதம் அடிப்பார் என்ற எதிர்ப்பார்ப்பு, 45 பந்துகளில் 87 ரன்களுக்கு ஆட்டமிழந்ததும் பொய்த்துப் போனது.
பிறகு களம் இறங்கிய மனீஷ் பாண்டே 31 பந்துகளில் 44 ரன்கள் எடுத்தார். இறுதியில் ஹைதராபாத் அணி, இரண்டு விக்கெட்டுகளை இழந்து 219 ரன்கள் எடுத்தது.
தொடர்புடைய செய்தி | IPL 2020 Match 46: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs கிங்ஸ் லெவன் பஞ்சாப், In Pics
மிகப்பெரிய ஸ்கோரை இலக்காகக் கொண்டு களம் இறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ஆரம்பத்திலேயே ஷிகர் தவான் மற்றும் மார்கஸ் ஸ்டோய்னிஸ் ஆகியோரை இழந்ததால், தொடக்கமே சொதப்பலாகிவிட்டது. நிலைமை முன்னேறாமல் அவ்வாறே தொய்வாக இருக்க, ரஷீத் கான் தனது முதல் ஓவரில் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தியபோது, டெல்லி கேபிடல்ஸின் நிலைமை தெளிவாகிவிட்டது.
ரஷீத் ஏழு ரன்கள் கொடுத்து மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்த சிறப்பான வெற்றி, ஐ.பி.எல் 2020 போட்டித் தொடரின் மிகச் சிறந்த போட்டிகளில் ஒன்றாக மாறிவிட்டது. இந்த வெற்றியின் மூலம், ப்ளே ஆஃப் சுற்றுக்கு போகலாம் என்ற ஹைதராபாத் அணியின் நம்பிக்கை உயிர்ப்புடன் இருக்கிறது. அதே நேரத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு இந்த போட்டி பின்னடைவை ஏற்படுத்திவிட்டது.
இந்த வெற்றியின் மூலம் ஐபிஎல் 2020 புள்ளிகள் அட்டவணையில் ஹைதராபாதுக்கு நன்மை என்றால் டெல்லிக்கு சங்கடம். புள்ளிப் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ள டெல்லி கேபிடல்ஸ், பிளே ஆஃப் சுற்றுக்கு செல்ல இன்னும் ஒரு வெற்றி தேவை. கடைசி ஆட்டம் வரை அந்த வாய்ப்பை விட்டுவிட அவர்கள் விரும்ப மாட்டார்கள். மும்பை இந்தியன்ஸ் பட்டியலில் தனது தலையாய இடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளது. இன்னும் முதலிடத்தில் உள்ளது. புள்ளிப் பட்டியலில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 3 வது இடத்தில் உள்ளது. கிங்ஸ் லெவன் பஞ்சாப் தொடர்ச்சியாக ஐந்து வெற்றிகளுடன் 4 வது இடத்தில் உள்ளது.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR