நேரலையில் காண: LIVE IPL 2020 MI vs CSK Match
11:28 PM 9/19/2020
சென்னை அணியை பொறுத்த வரை அம்பதி நாயுடு 48 பந்துகளில் 71 ரன்கள் எடுத்து வெற்றிக்கு வழிவகுத்தார்.
Bahubali Returns! #WhistleFromHome #WhistlePodu #Yellove #MIvCSK pic.twitter.com/eoIUK0wFK9
— Chennai Super Kings (@ChennaiIPL) September 19, 2020
11:20 PM 9/19/2020
இந்தியன் பிரீமியர் லீக் 2020 (IPL 2020) தொடரின் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது. முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 20 ஓவர் முடிவில் ஒன்பது விக்கெட் இழப்பிற்கு 162 ரன்கள் எடுத்தது.
163 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் ஆடிய சென்னை அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
This ONE's for you, #yellove FAMILY! #WhistleFromHome #WhistlePodu #MIvCSK pic.twitter.com/8F1gMgx3Gd
— Chennai Super Kings (@ChennaiIPL) September 19, 2020
11:00 PM 9/19/2020
வெற்றியை நோக்கி செல்லும் சென்னை சூப்பர் கிங்ஸ். 17 ஓவர் முடிவில் மூன்று விக்கெட் இழப்பிற்கு 134 ரன்கள் எடுத்துள்ளது. வெற்றி பெற 18 பந்துகளில் 19 ரன்கள் தேவை.
9:36 PM 9/19/2020
இன்றைய மும்பை அணிக்கு எதிரான முதல் போட்டியில் வெற்றி பெற சென்னை அணிக்கு 163 ரன்கள் தேவை. தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் ஆடி வருகின்றனர்.
9:25 PM 9/19/2020
மும்பை இந்தியன்ஸ் 162/9
IPL 2020 சீசனின் முதல்போட்டியில் சென்னை மற்றும் மும்பைக்கும் இடையில் நடைபெற்று வருகிறது. போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்ததை அடுத்து, மும்பை அணி முதலில் பேட்டிங் செய்தது. 20 ஓவர் முடிவில் ஒன்பது விக்கெட் இழப்பிற்கு 162 ரன்கள் எடுத்தது.
After Tiwary's impressive 42, Faf's three catches and Ngidi's three strikes limit us to 162/9 in Abu Dhabi!
Let's go out and defend this, boys #OneFamily #MumbaiIndians #MI #Dream11IPL #MIvCSK pic.twitter.com/Z7hLIv5pUU
— Mumbai Indians (@mipaltan) September 19, 2020
7:35 PM 9/19/2020
சென்னைக்கு எதிராக மும்பை 18 போட்டிகளில் வென்றுள்ளது
இதுவரை மும்பை மற்றும் சென்னை இடையே 30 போட்டிகள் நடத்தப்பட்டுள்ளன. அவற்றில் மும்பை அதிகமாக 18 போட்டியிலும், சென்னை 12 போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளது. இதில் இரண்டு சாம்பியன்ஸ் லீக் டி-20 களும் அடங்கும். இதுவரை 12 சீசன்களில் மும்பை மற்றும் சென்னை 7 முறை பட்டத்தை வென்றுள்ளன. இதில், மும்பை 4 முறை மற்றும் சிஎஸ்கே 3 முறை சாம்பியன் படத்தை கைபற்றியுள்ளனர்.
7:30 PM 9/19/2020
லசித் மலிங்கா vs ஜஸ்பிரித் பும்ரா
இலங்கை வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்க 122 போட்டிகளில் 170 விக்கெட்டுகளுடன் முதலிடம் பிடித்துள்ளார். இருப்பினும், அவர் ஏற்கனவே கொரோனா காரணமாக போட்டிகளில் இருந்து விலகியுள்ளார். இதுபோன்ற சூழ்நிலையில், மலிங்காவின் பற்றாக்குறையை போக்க ஜஸ்பிரித் பும்ராவிடம் முழு எதிர்பார்ப்பை கேப்டன் ரோஹித் சர்மா எதிர்பார்த்து உள்ளார். பும்ரா 77 போட்டிகளில் 82 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
7:00 PM 9/19/2020
IPL 2020 தொடரின் முதல் போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.
.@ChennaiIPL Captain MS Dhoni wins the toss and elects to bowl first in the season opener of #Dream11IPL.#MIvCSK pic.twitter.com/OAuLkAU7qb
— IndianPremierLeague (@IPL) September 19, 2020
6:00 PM 9/19/2020
போட்டிக்கு முன்பு சச்சின் டெண்டுல்கர் என்ன சொன்னார்?
சென்னைக்கும் மும்பைக்கும் இடையிலான போட்டிக்கு முன்பு சச்சின் டெண்டுல்கர் பேசுகையில், இரு அணிகளுக்கும் இடையிலான மோதலைக் காண்பது மிகவும் வேடிக்கையாக இருக்கும். இந்த ஆண்டு இந்த தொடரை யார் வெல்வார்கள் என்று சொல்வது கடினம், ஆனால் இரு அணிகளுக்கும் இடையே மிகப்பெரிய போட்டி எதிர்பார்க்கப்படுகிறது.
5:59 PM 9/19/2020
மும்பை இந்தியன்ஸ்: ரோஹித் சர்மா (கேப்டன்), குயின்டன் டி கோக் (விக்கெட் கீப்பர்), சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன், கீரோன் பொல்லார்ட், ஹார்டிக் பாண்ட்யா, கிருனல் பாண்ட்யா, நாதன் ஹில்டன் நைல் / மிட்செல் மெக்லெனகன், ராகுல் சாஹர், ட்ரெண்ட் போல்ட், ஜஸ்பிரீத் பும்ரா.
சென்னை சூப்பர்கிங்ஸ்: ஷேன் வாட்சன், ஃபாஃப் டுப்ளேசி, அம்பதி ராயுடு, மகேந்திர சிங் தோனி (கேப்டன், விக்கெட் கீப்பர்), கேதார் ஜாதவ், டுவைன் பிராவோ / சாம் கரண், ரவீந்திர ஜடேஜா, பியூஷ் சாவ்லா, இம்ரான் தாஹிர், தீபக் சாகூர், ஷார்துல் தாகூர்.
IPL 2020, MI vs CSK Live Cricket Score: இந்தியன் பிரீமியர் லீக் 2020 (IPL 2020) தொடரின் முதல் போட்டி சனிக்கிழமையான இன்று (செப்டம்பர் 19) இன்னும் சற்று தொடங்க உள்ளது. இந்த தொடரின் போட்டியின் முதல் போட்டியில் சென்னை சூப்பர்கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணி நேருக்கு நேர் மோத உள்ளது. இன்றைய போட்டியில் சென்னை கேப்டன் மகேந்திர சிங் தோனி (Mahendra Singh Dhoni) அல்லது மும்பை கேப்டன் ரோஹித் சர்மா (Rohit Sharma) இருவரில் கையில் தான் வெற்றி தோல்வி உள்ளது. இரு அணிகளும் வெற்றியுடன் போட்டியைத் தொடங்க விரும்புகின்றன.
மும்பை அணி (Mumbai Indians) சென்னைக்கு எதிரான தொடர்ச்சியாக ஐந்தாவது போட்டியில் வெற்றி பெற காத்திருக்கிறது. கடந்த சீசனில் சென்னை அணியை நான்கு போட்டிகளில் தோற்கடித்தது. அதே நேரத்தில், 2018 சீசனில் சென்னைக்கு எதிராக ஒரு ஒரே வெற்றியை மட்டும் மும்பை அணி பதிவு செய்தது. ஐபிஎல் (IPL History) வரலாற்றில் நான்காவது முறையாக, இரு அணிகளுக்கும் முதல் போட்டியில் மோத உள்ளன. 2012 ல் நடந்த முதல் போட்டியில் மும்பை அணி வென்றது. அதன் பின்னர், அந்த அணி முதல் போட்டியில் ஒவ்வொரு முறையும் தோற்றது.
மறுபுறம், சென்னை சூப்பர் கிங்ஸ் (Chennai Super Kings) அணி, 2018-க்கு பிறகு திரும்பியதிலிருந்து இரண்டு முறையும் தனது முதல் போட்டியில் வென்றுள்ளது. சென்னைக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் மிகவும் வெற்றிகரமான அணி எதுவென்றால், அது மும்பை இந்தியன்ஸ் அணி தான். 2013 முதல் 16 போட்டிகளில் தோனியின் அணியை 10 முறை வீழ்த்தியுள்ளது. இதில் 2013, 2015 மற்றும் 2019 ஆம் ஆண்டிற்கான இறுதிப் போட்டிகளும் (IPL Final) அடங்கும்.
ALSO READ |
IPL 2020: CSKக்கு எதிரான போட்டி குறித்து MI கேப்டன் ரோஹித் சர்மா கருத்து!
IPL இல் சிறந்த சாதனைகளை படைத்த இந்த வீரர்களும் அணிகளும்....யார் அவர்கள்?
‘மரண மாஸ் பாடல் தோனிக்கே பொருத்தமாக இருக்கும்’ – அனிருத்
இந்தியாவில், இந்த போட்டி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 (Star Sports 1), ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 2 (Star Sports 2), ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 இந்தி (Star Sports 1 Hindi) தொலைகாட்சியில் நேரடியாக ஒளிபரப்பப்படும். ஐபிஎல் போட்டிகள் டிஸ்னி + ஹாட்ஸ்டார் (Disney+Hotstar VIP) விஐபியில் ஆன்லைனில் ஒளிபரப்பப்படும். IPL போட்டியின் சமீபத்திய புதுப்பிப்புகளுக்கு நீங்கள் zeehindustantamil.in உடன் இணைந்திருங்கள்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR