IPL 2020 Points Table details: இந்த சீசனில் தொடர்ச்சியாக ஐந்து போட்டிகளில் தோல்வியடைந்த கிங்ஸ் லெவன் பஞ்சாப் (Kings XI Punjab) அக்டோபர் 20ம் தேதி நடைபெற்ற போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம், ஹாட்ரிக் வெற்றியைப் பெற்றுள்ளது. இந்தியன் பிரீமியர் லீக் (IPL 2020) இன் 38 வது போட்டியில் டெல்லி கேப்பிடல் (Delhi Capitals) அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது. இந்த வெற்றியின் மூலம், அந்த அணி புள்ளிகள் அட்டவணையில் முதல் -5 இடத்தைப் பிடித்தது. இதில் சிறப்பு என்னவென்றால், கடைசி மூன்று வெற்றிகள் புள்ளிகள் அட்டவணையில் முதல் -3 தரவரிசையில் இடம்பெற்றுள்ள அணிகளுக்கு (ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்) எதிராக இருந்தது.
இருப்பினும், பஞ்சாபிடம் தோல்வியுற்ற போதிலும், ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான டெல்லி அணி முதலிடத்தில் உள்ளது. அவருக்கு 10 போட்டிகளில் விளையாடி 14 புள்ளிகள் பெற்றுள்ளன. மும்பை இந்தியன்ஸ் (Mumbai Indians) இரண்டாமிடத்திலும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (Royal Challengers Bangalore) மூன்றாம் இடத்திலும் உள்ளன. மும்பை மற்றும் பெங்களூர் இரண்டுமே தலா 12 புள்ளிகளைக் கொண்டுள்ளன. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (Kolkata Knight Riders) நான்காவது இடத்தில் உள்ளது. கொல்கத்தா அணி ஒன்பது போட்டிகளில் ஆடி 10 புள்ளிகளைப் பெற்றுள்ளது.
ALSO READ | ‘என் பெற்றோருடன் எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை’-தெளிவுபடுத்தினார் PV Sindhu
வ.எண் | போட்டி | அணி | வெற்றி | தோல்வி | முடிவு இல்லை | புள்ளிகள் | ரன்ரேட் |
1. | டெல்லி கேப்பிடல் | 10 | 7 | 3 | 0 | 14 | +0.774 |
2. | மும்பை இந்தியன்ஸ் | 9 | 6 | 3 | 0 | 12 | +1.201 |
3. | ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் | 9 | 6 | 3 | 0 | 12 | -0.096 |
4. | கொல்கத்தா நைட் ரைடர்ஸ் | 9 | 5 | 4 | 0 | 10 | -0.607 |
5. | கிங்ஸ் லெவன் பஞ்சாப் | 10 | 4 | 6 | 0 | 8 | -0.177 |
6. | ராஜஸ்தான் ராயல்ஸ் | 10 | 4 | 6 | 0 | 8 | -0.591 |
7. | சன்ரைசர்ஸ் ஹைதராபாத் | 9 | 3 | 6 | 0 | 6 | +0.008 |
8. | சென்னை சூப்பர்கிங்ஸ் | 10 | 3 | 7 | 0 | 6 | -0.463 |
டெல்லி பேட்ஸ்மேன் ஷிகர் தவான் (Shikhar Dhawan) அக்டோபர் 20 ஆம் தேதி இந்த ஐபிஎல்லில் தொடர்ந்து இரண்டாவது சதம் அடித்தார். இந்த செயல்திறன் மூலம், அவர் ஆரஞ்சு தொப்பி பட்டியலில் இரண்டாவது இடத்தைப் பிடித்தார். முன்னதாக அவர் நான்காவது இடத்தில் இருந்தார். அதிக ரன்கள் எடுத்தவர்களின் பட்டியலில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் கேப்டன் கே.எல்.ராகுல் (KL Rahul) முதலிடத்தில் உள்ளார்.
அதிக ரன்கள் எடுத்த வீரர்கள் பட்டியல் (Orange Cap List)
வீரர்கள் | அணி | போட்டி | ரன்கள் | அதிகபட்சம் | ரன்ரேட் |
கே.எல்.ராகுல் | பஞ்சாப் | 10 | 540 | 132 * | 135.67 |
ஷிகர் தவான் | டெல்லி | 10 | 465 | 106 * | 149.03 |
மாயங்க் அகர்வால் | பஞ்சாப் | 10 | 398 | 106 | 155.46 |
ஃபாஃப் டுப்ளெஸிஸ் | சென்னை | 10 | 375 | 87 * | 141.50 |
விராட் கோலி | பெங்களூர் | 9 | 347 | 90 * | 127.57 |
ALSO READ | இணையத்தை கலக்கும் விராட்-அனுஷ்காவின் Sunset Photo..!!!
டெல்லி கேப்பிடல் அணியை சேர்ந்த ககிசோ ரபாடா (Kagiso Rabada) அதிக விக்கெட் எடுத்தவர்களின் பட்டியலில் உள்ளார். அதாவது ஊதா தொப்பி அவரின் தலையில் உள்ளது. இதுவரை 21 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். பஞ்சாபின் முகமது ஷமி (Mohammad Shami) இரண்டாவது இடத்தில் உள்ளார். மூன்றாம் இடத்தில் மும்பையைச் சேர்ந்த ஜஸ்பிரீத் பும்ரா (Jaspreet Bumrah) உள்ளார்.
டாப் -5 பந்து வீச்சாளர் (Purple Cap)
வீரர்கள் | அணி | போட்டி | ஓவர் | விக்கெட் | எக்னாமி |
காகிசோ ரபாடா | டெல்லி | 10 | 39.4 | 21 | 7.58 |
முகமது ஷமி | பஞ்சாப் | 10 | 38.4 | 16 | 8.43 |
ஜஸ்பிரீத் பும்ரா | மும்பை | 9 | 36 | 15 | 7.44 |
ஜோஃப்ரா ஆர்ச்சர் | ராஜஸ்தான் | 10 | 39.4 | 13 | 6.75 |
யுஸ்வேந்திர சாஹல் | பெங்களூர் | 9 | 34 | 13 | 7.64 |
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G