இணையத்தை கலக்கும் விராட்-அனுஷ்காவின் Sunset Photo..!!!

அனுஷ்கா சர்மா மற்றும் விராட் கோஹ்லி  தாங்கள் பெற்றோராகும் அந்த அன்பான தருணத்தை எதிர்ப்பார்த்து காத்திருக்கிறார்கள்

Written by - ZEE Bureau | Last Updated : Oct 19, 2020, 11:01 AM IST
  • விராட் மற்றும் அனுஷ்கா ஒரு குளத்தில் நடுவில் தோன்றும் காட்சி படம்பிடிக்கப்பட்டுள்ளது.
  • அவர்களின் இந்த அன்பான காதம் புகைப்படத்தை கிரிக்கெட் வீரர் ஏபி டிவில்லியர்ஸ் AB de Villiers தனது கேமிராவில் பதிவு செய்துள்ளார்.
  • அனுஷ்கா சர்மா மற்றும் விராட் கோஹ்லி தாங்கள் பெற்றோராகும் அந்த அன்பான தருணத்தை எதிர்ப்பார்த்து காத்திருக்கிறார்கள்
இணையத்தை  கலக்கும் விராட்-அனுஷ்காவின் Sunset Photo..!!!

புதுடெல்லி: ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெறும் ஐபிஎல் போட்டிகளுக்கு (IPL 2020) இடையில் தனது பிஸியான ஷெட்யூலிலும்  கிரிக்கெட் வீரர் விராட் கோலி தனது மனைவி அனுஷ்கா ஷர்மாவுடன் நேரத்தை செலவிட்டார். ஞாயிற்றுக்கிழமை, சூரியன் அஸ்தமானத்தை அவர்கள் ரசிக்கும் ஒரு அழகான புகைப்படம் இப்பொது இணையத்தை கலக்கி வருகிறது

விராட் மற்றும் அனுஷ்கா ஒரு குளத்தில் நடுவில் தோன்றும் காட்சி படம்பிடிக்கப்பட்டுள்ளது.

அவர்களின் இந்த அன்பான காதம் புகைப்படத்தை  கிரிக்கெட் வீரர் ஏபி டிவில்லியர்ஸ் AB de Villiers தனது கேமிராவில் பதிவு செய்துள்ளார்.விராட் மற்றும் ஏபி டிவில்லியர்ஸ் இருவரும் ஐபிஎல்லில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணிக்காக விளையாடுகிறார்கள்.

அனுஷ்கா சர்மா மற்றும் விராட் கோஹ்லி  தாங்கள் பெற்றோராகும் அந்த அன்பான தருணத்தை எதிர்ப்பார்த்து காத்திருக்கிறார்கள். ஆகஸ்ட் மாதத்தில் அவர்கள் அந்த குட் நியூஸை சமூக ஊடகங்களில் பகிர்ந்து கொண்டனர்.

முன்னதாக துபாய் சர்வதேச மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்க்ஸ் மற்றும் பெங்களூர் அணிகள் இடையே போட்டிகள் நடைபெற்ற  போது விராட் கோலியின் மனைவியும் பாலிவுட் நடிகையுமான அனுஷ்கா சர்மா கணவரை உற்சாகப்படுத்த மைதானத்திற்கு வந்தார். தான் கர்ப்பமாக இருக்கும் தகவலை வெளியிட்ட பிற்கு, அனுஷ்கா முதல் முறையாக பொதுவில் தோன்றிய சம்பவமாக அது இருந்தது

அப்போது அனுஷ்கா விராட்டுக்கு கொடுத்த Flying Kiss விராட்டை மட்டுமல்ல அனைவரையும் உற்சாகப்படுத்துவதாக இருந்தது. 

இதன் பின்னர், அனுஷ்காவின் இந்த படமும் சமூக ஊடகங்களில் வைரலாகிறது. இதன் காரணமாக, ட்விட்டர் உட்பட பல தளங்களில் மக்கள் அதனை ரசித்து கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர். 

பாலிவுட் நடிகை அனுஷ்கா ஷர்மா ஐபிஎல் 2020 (IPL 2020) தொடங்கியதிலிருந்து ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருந்து வருகிறார் என்றாலும், கணவர் விராட் கோலி அணியை உற்சாகப்படுத்த மைதானம் வந்தது இதுவே முதல் முறை.

மேலும் படிக்க | IPL 2020: அனுஷ்கா சர்மா விராட் கோலிக்கு கொடுத்த Flying Kiss, வைரலாகிய படங்கள்..!!!

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYe

More Stories

Trending News