IPL 2020: Mumbai Indians தொடக்க ஆட்டக்காரர்களாக Rohit -Quinton De Kock தொடர்கின்றனர்

மும்பை இந்தியன்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான ரோஹித் சர்மாவும், குயின்டன் டி கோக் (Quinton De Kock) இருவரும் அதே வரிசையில் தொடர்ந்து இருக்கப்போவதாக அணியின் பயிற்சியாளர் மகேலா ஜெயவர்தன (Mahela Jayawardene) தெரிவித்தார்.

Written by - ZEE TAMIL NEWS | Edited by - ZEE TAMIL NEWS | Last Updated : Sep 19, 2020, 12:00 AM IST
 IPL 2020: Mumbai Indians தொடக்க ஆட்டக்காரர்களாக Rohit -Quinton De Kock தொடர்கின்றனர் title=

புதுடெல்லி: மும்பை இந்தியன்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான ரோஹித் சர்மாவும், குயின்டன் டி கோக் (Quinton De Kock) இருவரும் அதே வரிசையில் தொடர்ந்து இருக்கப்போவதாக அணியின் பயிற்சியாளர் மகேலா ஜெயவர்தன (Mahela Jayawardene) தெரிவித்தார்.
அபுதாபியில் நடைபெற்ற மெய்நிகர் பத்திரிகையாளர் சந்திப்பில் ஜெயவர்தன இந்த தகவலை தெரிவித்தார். அப்போது, அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மாவும் உடன் இருந்தார்.

எப்போதும் சில தெரிவுகள் இருப்பது அவசியமானது. அணியில் Lynn இணைந்திருப்பது மிகவும் நல்ல செய்தி. ஆனால், Rohit – Quinton இணை அருமையாக இருக்கிறது. எனவே அவர்களே தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கி மட்டை வீசுவார்கள் என மும்பை இண்டியன்ஸ் அணியின் பயிற்சியாளர் மகேலா ஜெயவர்தன தெரிவித்தார்.

"விருப்பங்களைக் கொண்டிருப்பது எப்போதுமே சிறந்தது, லின் அணியில் ஒரு சிறந்தவர். ஆனால் ரோஹித் மற்றும் குயின்டன் ஆகியோரின் இணை தனித்துவமானது, அவர்கள் ஒருவருக்கொருவர் அனுசரித்து விளையாடுகிறார்கள். அவர்கள் நல்ல புரிதல் கொண்டவர்கள் என்பதோடு நல்ல அனுபவம் வாய்ந்தவர்கள். அவரும் ஒரு நல்ல கேப்டன், எனவே ஏன் சீராக சென்றுக் கொண்டிருக்கும் ஒன்றில் மாற்றம் ஏற்படுத்த வேண்டும்? ஒன்றை நீங்கள் சரிசெய்ய விரும்புகிறீர்களா? நாங்கள் அவர்களுடன் தொடருவோம். Lynn அணியில் இணைந்திருப்பதால் எங்களுக்கு மற்றுமொரு தெரிவு அதிகமாகியிருக்கிறது. கடந்த சில ஆண்டுகளாக நாங்கள் எப்போதும் இதுபோன்ற மாறுதல்களைச் செய்திருக்கிறோம்" என்று அவர் தெரிவித்தார். அபுதாபியில் சனிக்கிழமையன்று நடைபெறும் இந்த ஐ.பி.எல் சீசனின் முதல் போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸுக்கு எதிராக, மும்பை இண்டியன்ஸ் களம் இறங்குகிறது.  

மும்பை அணிக்காக ரோஹித் முன்பு 3 மற்றும் 4 வது இடத்தில் பேட் செய்துள்ளார். டாப் ஆர்டரில் பேட்டிங் செய்வதை ரசிப்பதாகவும், தொடர்ந்து அதைச் செய்வேன் என்றும் கூறுகிறார். இருப்பினும், அணியின் தேவைக்கேற்ப அனைத்து மாற்றங்களையும் ஏற்றுக் கொள்ளும் பக்குவம் தனக்கு இருப்பதாகவும் அவர் கூறினார்.

"கடந்த சீசனில், முழு போட்டிகளிலும் நான் இன்னிங்ஸைத் தொடங்கினேன், அது இந்த சீசனிலும் தொடரும். அதே நேரத்தில், அணியின் தேவைக்கேற்ப, எப்போதும் மாறுதல்களுக்குத் தயாராக இருக்கிறேன்.   அணி என்ன விரும்புகிறது, அணிக்கு எது நல்லது என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன். அதுவே எனக்கு மகிழ்ச்சி அளிப்பதுமாகும். எதுஎப்படி இருப்பினும், அணியின் இரண்டாவது தொடக்க பேட்ஸ்மேன் குயின்டன் டி கோக் என்பது நிச்சயம்.

கடந்த சீசனில், ரோஹித் மற்றும் டி கோக் 16 போட்டிகளில் 15 போட்டிகளில் இன்னிங்ஸைத் தொடங்கினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மும்பை அணி நான்காவது முறையாக சாதனை படைத்தது. இருவரும் சேர்ந்து 5 அரைசதங்களின் உதவியுடன் சராசரியாக 37.66 என்ற அளவில் மொத்தம் 565 ரன்கள் எடுத்தனர்.

மும்பை இந்தியன்ஸின் முகாம் அபுதாபி ஆகும், அங்கு அணி தனது 14 லீக் போட்டிகளில் எட்டு போட்டிகளில் விளையாட வேண்டும். நாளை, அவர்கள் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸுக்கு எதிராக விளையாடுவார்கள்.

Trending News