ஐபிஎல் 2022: மும்பை இந்தியன்ஸின் கீரன் பொல்லார்டை நேற்றைய சென்னைக்கு எதிரான போட்டியின் பொது தோனி, தனது வியூகத்தால் மீண்டும் ஒரு முறை அவுட் செய்தார். இந்த நிகழ்வு 2010 ஐபிஎல் இறுதிப் போட்டியில் தோனி பொல்லார்டை அவுட் செய்ய மேற்கொண்டது போல் இருந்தது என்று நெட்டிசன்கள் சிலாகித்து வருகின்றனர். மகேஷ் தீக்ஷனாவின் பந்துவீச்சில் 17வது ஓவரில் பொல்லார் பேட்டிங் செய்து கொண்டிருந்தார். அப்போது சிவம் துபேவை அம்பயருக்கு சற்று தள்ளி பவுண்டரி முனையில் நிப்பாட்டி இருந்தார் தோனி. அடுத்த பந்திலேயே பொல்லார்ட் (14) அவுட் ஆகி வெளியேறினார். தோனியின் புத்திசாலித்தனம், பொல்லார்டுக்கு எதிரான அவர் செய்த பழைய சம்பவத்தை நிவைவூட்டுகிறது.
Field set by MS Dhoni, next ball Kieron Pollard out. pic.twitter.com/qmg00JFwMM
— Mufaddal Vohra (@mufaddal_vohra) April 21, 2022
— Maqbool (@im_maqbool) April 21, 2022
மேலும் படிக்க | CSKvsMI ஜடேஜாவ விடுங்க! பின்னாடி வந்த ராயுடு செஞ்சதா பாருங்க
2010 ஐபிஎல் இறுதிப் போட்டியில், பொல்லார்டு மற்றும் அம்பதி ராயுடு ஆகியோர் மும்பையை அசாத்தியமான வெற்றிக்கு எடுத்து சென்று கொண்டிருந்த போது, தோனி முதல் முறையாக இதேபோன்ற சூழ்ச்சியை பயன்படுத்தினார். 8 பந்துகளில் 28 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், ராயுடு ரன் அவுட் முறையில் அவுட் ஆனார். அதற்கு முன் தோனி ஒரு ஸ்ட்ரைட்டரான மிட்-ஆஃப் பீல்டரை (மேத்யூ ஹெய்டன்) பவுலருக்கு (ஆல்பி மோர்கல்) பொல்லார்டுக்கு எதிராக நிறுத்தினார். அப்போது பொல்லார்ட் அடித்த பந்தை ஹெய்டன் பிடிக்க 22 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை தோல்வியை தழுவியது.
2017 ஐபிஎல் இறுதிப் போட்டியில், மும்பைக்கு எதிராக கேப்டன் ஸ்டீவ் ஸ்மித்தின் கீழ் ரைசிங் புனே சூப்பர்ஜெயன்ட்ல் தோனி மீண்டும் தனது சூழ்ச்சியைக் கொண்டு வந்தார். மும்பை இன்னிங்ஸின் 11 வது ஓவரில் கீரன் பொல்லார்ட் பேட்டிங் செய்த போது, ஸ்மித்தை நேராக பீல்டரை வைக்குமாறு தோனி அறிவுறுத்தினார். பிறகு பொல்லார்ட் விக்கெட்டும் வீழ்ந்தது. ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியிலும் விராட் கோலியை அவுட் செய்ய தோனி பீல்டிங்கில் சில மாற்றங்கள் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR