ஐபிஎல் 2022 நிறுத்தப்படுமா? முக்கிய ஊழியருக்கு கொரோனா தொற்று!

ஐபிஎல் 2022: டெல்லி கேபிடல்ஸ் பிசியோ பேட்ரிக் ஃபார்ஹார்ட்க்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.  

Written by - RK Spark | Last Updated : Apr 15, 2022, 05:36 PM IST
  • இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகள் இந்தியாவில் நடைபெறுகிறது.
  • தற்போது டெல்லி அணி பிசியோவிற்கு கொரோனா தொற்று உறுதி.
  • ஐபிஎல் போட்டிகள் நிறுத்தப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஐபிஎல் 2022 நிறுத்தப்படுமா? முக்கிய ஊழியருக்கு கொரோனா தொற்று!  title=

ஐபிஎல் 2022 போட்டிகள் இந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற்று வருகிறது.  தற்போது கொரோனா சூழல் குறைந்துள்ள நிலையில், பாதுகாப்பு நடைமுறைகள் காரணமாக மும்பையில் உள்ள 4 மைதானங்களில் மட்டும் அனைத்து போட்டிகளும் நடைபெற்று வருகிறது.  கடந்த ஆண்டு இந்தியாவில் தொடங்கிய ஐபிஎல் 2021 போட்டிகள் பாதி நடைபெற்ற நிலையில் கொரோனா பரவல் அதிகமானதால் மீதி போட்டிகள் ஐக்கிய அமீரகத்தில் நடைபெற்றது.

மேலும் படிக்க | ராஜஸ்தான் கோட்டையில் சிம்மாசனமிட்ட குஜராத் டைட்டன்ஸ் - தரமான வெற்றி

 

அதற்கு முந்தைய ஆண்டு ஐபிஎல் 2020 போட்டிகள் முழுவதும் ஐக்கிய அமீரகத்தில் நடைபெற்றது.  இந்தியாவை தாண்டி மற்ற நாடுகளில் போட்டிகளை நடத்துவதால் இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு வரும் வருமானம் மிகவும் பாதிக்கப்படுவதாக கூறப்படுகிறது.  இந்தியாவில் நடைபெற வேண்டிய உலக கோப்பை போட்டியும் ஐக்கிய அமீரகத்தில் தான் நடைபெற்றது.  தற்போது இந்தியாவில் கொரோனா பாதிப்பு குறைந்துள்ள நிலையில் ஐபிஎல் 2022 போட்டிகள் வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது.

dc

இந்நிலையில், டெல்லி கேபிடல்ஸின் பிசியோ பேட்ரிக் ஃபார்ஹார்ட் கோவிட்-19 ஏற்பட்டுள்ளதாக இந்தியன் பிரீமியர் லீக் நிர்வாகம் தெரிவித்துள்ளது. "டெல்லி கேபிடல்ஸ் பிசியோ பேட்ரிக் ஃபார்ஹார்ட் கோவிட்-19 க்கு ஆளாகி உள்ளார். அவர் தற்போது டிசி மருத்துவக் குழுவால் உன்னிப்பாகக் கண்காணிக்கப்பட்டு வருகிறார்" என்று அதிகாரப்பூர்வ ஐபிஎல் தளம் தெரிவித்துள்ளது.  இதனால் இரண்டு மாத கால ஐபிஎல்லில் கோவிட் அச்சுறுத்தல் அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டும், இதே போல் ஒருவரிடம் இருந்து ஆரம்பித்து பின்பு தொற்று அதிகமானது.  

மேலும் படிக்க | கோலியை தொடர்ந்து கேப்டன் பதவியில் இருந்து விலகிய மற்றொரு வீரர்!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துகொள்ளவும், உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைதளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

ஃபேஸ்புக்கில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News