ஐபிஎல் போட்டியில் விலகிய வில்லியம்சன் - சன்ரைசர்ஸூக்கு பின்னடைவு

ஐபிஎல் போட்டியில் இருந்து சன்ரைசர்ஸ் அணியின் கேப்டன் வில்லியம்சன் விலகியுள்ளதால், அந்த அணிக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. 

Written by - S.Karthikeyan | Last Updated : May 19, 2022, 10:25 AM IST
  • ஐபிஎல் தொடரில் இருந்து விலகல்
  • நாடு திரும்பும் வில்லியம்சன்
  • காரணம் என்ன? சன்ரைசர்ஸ் விளக்கம்
ஐபிஎல் போட்டியில் விலகிய வில்லியம்சன் - சன்ரைசர்ஸூக்கு பின்னடைவு title=

ஐபிஎல் தொடர் கிட்டத்தட்ட இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்டது. இந்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் முதன்முறையாக களமிறங்கிய குஜராத் டைட்டன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் ஐபிஎல் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுவிட்டன. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் ஆகிய அணிகள் வெளியேறிவிட்டன. எஞ்சியிருக்கும் 2 இடங்களுக்கு கடும் போட்டி நிலவுகிறது. டெல்லி, ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரு உள்ளிட்ட அணிகள் பிளே ஆஃப் ரேஸில் இருக்கின்றன.

பஞ்சாப் மற்றும் சன்ரைசர்ஸ் அணிகள் நூலிழையிலான வாய்ப்பில் நீடிக்கின்றன. இந்த சூழலில் சன்ரைசர்ஸ் அணியின் கேப்டன் வில்லியம்சன் ஐபிஎல் தொடரில் இருந்து விலகியுள்ளார். அவரின் மனைவி விரைவில் தாய்மை அடைய இருப்பதால், தாயகம் திரும்புகிறார். மனைவி மற்றும் குழந்தையை அருகில் இருந்து பார்த்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக வில்லியம்சன் ஐபிஎல் தொடரில் இருந்து விலகும் முடிவை எடுத்துள்ளார். சன்ரைசர்ஸ் அணியும் இதனை ஏற்றுக் கொண்டு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 

மேலும் படிக்க | ஐபிஎல்-லில் வரலாறு படைத்த லக்னோ - வெளியேறியது கொல்கத்தா

இது குறித்து சன்ரைசர்ஸ் அணி வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், " எங்கள் கேப்டன் கேன் வில்லியம்சன் தனது குடும்பத்தில் புதிதாக இணைய இருக்கும் புதிய உறுப்பினருக்காக நியூசிலாந்திற்கு செல்கிறார். கேன் வில்லியம்சன் மனைவியின் சுகப்பிரசவத்துக்காகவும் பாதுகாப்புக்காகவும் வாழ்த்துகிறோம்” என கூறியுள்ளது.  கடைசியாக மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சன்ரைசர்ஸ் அணி விளையாடியது. இப்போட்டியில் சன்ரைசர்ஸ் அணி 193 ரன்கள் குவித்தது. 194  ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி 3 ரன்களில் தோல்வியை தழுவியது.

சிறப்பாக விளையாடியபோதும் அந்த அணியால் வெற்றியை பெற முடியவில்லை. அதேநேரத்தில் இந்த வெற்றி மூலம் சன்ரைசர்ஸ் அணி பிளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பில் தங்களை தக்க வைத்துக் கொண்டது. பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் மிகப்பெரிய ரன்கள் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் அணி வெற்றி பெற வேண்டும். அப்படியான வெற்றியை பெற முடியாவிட்டால் சன்ரைசர்ஸ் அணிக்கு பிளே ஆஃப் சுற்றுக்கு செல்லும் வாய்ப்பு இல்லை. 

மேலும் படிக்க | பேரு மாலிக்! ரெக்கார்ட என் பேருல எழுதுங்க

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News