ஐபிஎல் போட்டியில் அறிமுகமாகப்போகும் புதிய ரூல்ஸ்!

அடுத்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் புதிய விதிமுறையை அறிமுகப்படுத்த ஐபிஎல் நிர்வாகம் முடிவெடுத்துள்ளது.   

Written by - S.Karthikeyan | Last Updated : Dec 2, 2022, 08:28 PM IST
  • ஐபிஎல் போட்டியில் புதிய விதிமுறை
  • இம்பேக்ட் பிளேயரை களமிறக்கலாம்
  • இந்த ஆண்டு நடைமுறைக்கு வருகிறது
ஐபிஎல் போட்டியில் அறிமுகமாகப்போகும் புதிய ரூல்ஸ்!  title=

ஐபிஎல் 2023 தொடர் அடுத்த ஆண்டு தொடங்க இருக்கிறது. அதற்கான முன்களப் பணிகள் ஏற்கனவே முழுமூச்சாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில், புதிய விதிமுறை ஒன்றையும் அறிமுகப்படுத்தவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது. ஐபிஎல் 2023 தொடரின்போது இம்பேக்ட் பிளயேர் என்ற திட்டம் நடைமுறைப்படுத்தப்பட இருகிறது.  

இம்பேக்ட் பிளேயர் என்றால் என்ன?

இம்பேக்ட் ப்ளேயர் அதாவது தாக்கத்தை ஏற்படுத்தும் வீரர். அந்த பிளேயரை போட்டி நடந்து கொண்டிருக்கும் போது தேவைப்பட்டால் விளையாடும்  பிளேயிங் லெவனில் இருந்து ஒரு வீரரை வெளியே அனுப்பிவிட்டு, களத்தில் விளையாட வைக்கலாம். இந்த விதிமுறையை பயன்படுத்துவதற்கு ஒவ்வொரு அணிகளும் முதலில் தங்களது 11 பேர் கொண்ட அணியை சமர்ப்பிக்கும்போது இம்பேக்ட் வீரராக ஐபிஎல் போட்டியின் நடுவே பயன்படுத்த விரும்பும் 4 உத்தேச வீரர்களின் பெயர்களை முன்கூட்டியே சமர்ப்பிக்க வேண்டும்.

மேலும் படிக்க | 'எங்களையும் விட மாட்டீங்களா மகா பிரபு’ கம்பீரின் கருத்துக்கு வெளிநாட்டு கிரிக்கெட் பயிற்சியாளர்களின் மைண்ட் வாய்ஸ்

ஆனால் இந்த விதிமுறையை பயன்படுத்த நினைத்தால் ஒரு இன்னிங்ஸின் 14 வது ஓவருக்கு முன்பாக பயன்படுத்த வேண்டும். இந்த விதிமுறையை களத்தில் இருக்கும் நடுவர்களிடம் தெரிவித்து விட்டு இரு அணிகளும் தேவைப்படும் சமயங்களில் பயன்படுத்திக் கொள்ளலாம். அதே சமயம் மாற்றப்பட்டு வெளியே வந்த பழைய வீரர் மேற்கொண்டு அந்தப் போட்டியில் சப்ஸ்டியூட் வீரராக கூட களமிறங்க முடியாது. ஒருவேளை மழை பெய்து போட்டி 10 ஓவர்களாக குறைக்கப்படும் பட்சத்தில் இந்த விதிமுறையை யாருமே பயன்படுத்த முடியாது. சையது முஷ்டாக் அலி தொடரில் இந்த விதிமுறையை பிசிசிஐ பரிசோதித்த நிலையில், ஐபிஎல் 2023 தொடரில் முதன்முறையாக அறிமுகப்படுத்த இருக்கிறது.

மேலும் படிக்க | ரோகித், விராட் கோலிக்கு சலுகை எதற்கு? சரமாரியாக விளாசிய கவாஸ்கர்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News