ஸ்காட்லாந்து மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 20 ஓவர் போட்டி எடின்பெர்க் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் நியூசிலாந்து அணி அதிரடியாக விளையாடி 5 விக்கெட் இழப்புக்கு 225 ரன்கள் குவித்தது. நியூசிலாந்து அணியின் அதிரடி வீரர் பின் ஆலம், ஸ்காட்லாந்து பந்துவீச்சை துவம்சம் செய்தார். பந்துகளை பவுண்டரிக்கு கோட்டுக்கு பறக்க விடுவதையே குறியாக வைத்து விளையாடிய அவர், 56 பந்துகளில் சதமடித்தார். இதில் 8 பவுண்டரிகளும், 6 சிக்சர்களும் அடங்கும்.
மேலும் படிக்க | அசத்தும் செஸ் ஒலிம்பியாட்! அதிவேக 5ஜி இன்டர்நெட், 2000 சிம்கார்டுகள் தயார்
அவருக்கு பக்கபலமாக மார்டின் கப்தில் 40 ரன்கள் எடுத்தார். இருவரின் இந்த ஆட்டத்தால் இமாலய இலக்கை நிர்ணயித்த நியூசிலாந்து, பந்துவீச்சிலும் சிறப்பாக செயல்பட்டது. கத்துக்குட்டி அணியாக இருந்தாலும் ஸ்காட்லாந்து சிறப்பாக விளையாடியது. 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு அந்த அணி 157 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது. இப்போட்டிக்குப் பிறகு விராட் கோலி மற்றும் ஆர்சிபி அணியை ஐபிஎல் ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர். திறமையான வீரரான விளையாட வைக்காமல் இருந்தது ஏன் என ஆர்சிபி அணிக்கு கேள்வி எழுப்பியுள்ளனர்.
விராட் கோலி அணியில் இருந்தும் திறமையான வீரர்களை அடையாளம் தவறிவிட்டாரா?. இப்படியான வீரர்களை சரியாக பயன்படுத்தாததே ஆர்சிபி அணியின் தோல்விக்கு காரணம் என பட்டியலிட்டுள்ள ரசிகர்கள், திறமையான வீரர்களை அணியில் வைத்திருந்தால் மட்டும் போதாது. அவர்களை சரியாக பயன்படுத்தவும் தெரிந்திருக்க வேண்டும் என கூறியுள்ளனர். பின் ஆலம் போன்ற வீரர்களை எலிமினேட்டர் போட்டிகளில் பயன்படுத்தியிருந்தால், நிச்சயம் ஆர்சிபி அணியின் முடிவு வேறு மாதிரியாக இருந்திருக்க வாய்ப்புகள் உள்ளன என்றும் மன வேதனையுடன் தெரிவித்துள்ளனர் ரசிகர்கள். ஒரே ஒரு போட்டியில் சதமடித்ததன் மூலம் சர்வதேச அளவில் கிரிக்கெட் ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்துள்ளார் பின் ஆலன்.
மேலும் படிக்க | CWG 2022: காமன்வெல்த் போட்டிகளில் கலந்துக் கொள்ளும் இந்திய விளையாட்டு வீரர்கள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ