சிஎஸ்கே-வுடன் மோதல்: ஜடேஜா போட்ட கண்டிஷன் - சமாதானப்படுத்திய தோனி

சிஎஸ்கே நிர்வாகத்துக்கும் ஜடேஜாவுக்கும் இடையே மோதல் இருந்ததை அந்த அணியின் தலைமை நிர்வாக அதிகாரி காசி விஸ்வநாதன் ஒப்புக் கொண்டுள்ளார். மேலும், ஜடேஜாவை தோனி தான் சமானதானப்படுத்தினார் என்றும் தெரிவித்துள்ளார்.  

Written by - S.Karthikeyan | Last Updated : Mar 27, 2023, 01:55 PM IST
சிஎஸ்கே-வுடன் மோதல்: ஜடேஜா போட்ட கண்டிஷன் - சமாதானப்படுத்திய தோனி title=

ஐபிஎல் தொடரில் மிக பலம் வாய்ந்த அணியான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடந்த ஐபிஎல் போட்டியில் படுமோசமாக தோல்விகளை சந்தித்தது. வீரர்களுக்கும், அணி நிர்வாகத்துக்கும் இடையே பிரச்சனை இருந்ததால் அவர்கள் சரியாக விளையாடவில்லை என அப்போதே பேச்சு அடிபட்டது. குறிப்பாக சுரேஷ் ரெய்னா மற்றும் ஹர்பஜன் சிங் ஆகியோர் திடீரென சிஎஸ்கே அணியில் இருந்து விலகினர். அவர்களின் விலகலதைத் தொடர்ந்து சிஎஸ்கே நிர்வாகத்துக்கும் ஜடேஜாவுக்கும் மோதல் ஏற்பட்டது. கடந்த சீசனின் ஜடேஜாவை கேப்டனாக நியமித்த சென்னை சூப்பர் கிங்ஸ், தொடர் தோல்விகளை சந்தித்தவுடன் கேப்டன் பொறுப்பில் இருந்து அவரை அதிரடியாக நீக்கியது.

மேலும் படிக்க | இதுவும் போச்சா? பதவி, பணம் என இரண்டையும் இழந்து நிற்கும் கேஎல் ராகுல்!

இது ஜடேஜாவுக்கு பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. தொடர்ந்து சிஎஸ்கே அணியில் விளையாட விரும்பாத அவர், காயம் என கூறிவிட்டு எஞ்சிய போட்டிகளில் விளையாடவில்லை. ஐபிஎல் தொடருக்குப் பிறகு சிஎஸ்கே அணியின் அனைத்து புகைப்படங்களையும் நீக்கிய அவர், இன்ஸ்டாகிராமில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை அன்ஃபாலோ செய்தார். மேலும், மற்ற அணிகள் ஜடேஜாவிடம் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், அவரும் சிஎஸ்கே அணியில் இருந்து வெளியேற தயாராக இருந்ததாக செய்திகள் பரவியது.

அதனை முதன்முறையாக ஒப்புக் கொண்டிருக்கிறார் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை நிர்வாகி காசி விஸ்வநாதன். ஜடேஜாவுக்கு அணி நிர்வாகத்தின் மீது அதிருப்தி இருந்தது. அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தினோம். குறிப்பாக அணியின் கேப்டன் தோனி நீண்ட நேரம் ஜடேஜாவிடம் பேசினார். அவரின் தொடர் சமாதானத்துக்குப் பிறகே ஜடேஜா மீண்டும் முழு மனதுடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாட ஒப்புக் கொண்டார். அவர் சில கோரிக்கைகளை அணி நிர்வாகத்திடம் வைத்தார். அதனை செய்து கொடுக்க சிஎஸ்கேவும் தயாராக இருந்தது. இப்போது எந்த பிரச்சனையும் இல்லை. சிறப்பாக இந்த ஆண்டு ஐபிஎல் தொடரை எதிர்கொள்ள இருக்கிறோம் என கூறியுள்ளார்.

மேலும் படிக்க | IPL 2023: சிஎஸ்கேவின் துருப்புச் சீட்டு இவர் தான்..! மற்ற அணிகளுக்கு கிலி காட்டப்போகிறார்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News