டெல்லி அணிக்கு ஆபத்பாந்தவானாக வந்திருக்கும் ஜேக் மெக்குர்க்! யார் இந்த 22 வயது வீரர்

டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி ஐபிஎல் 2024 சீசனில் தொடர் தோல்விகளை சந்தித்துக் கொண்டிருந்த நிலையில், லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் களமிறங்கி அதிரடி  காட்டி அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்து சென்றுள்ளார் ஜேக் ஃப்ரேசர்-மெக்குர்க்.

Written by - S.Karthikeyan | Last Updated : Apr 13, 2024, 11:40 AM IST
  • டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் புதிய நம்பிக்கை நட்சத்திரம்
  • 22 வயதான ஆஸ்திரேலியாவின் ஜேக் ஃப்ரேசர்-மெக்குர்க்
  • லக்னோவுக்கு எதிரான போட்டியில் அரைசதம் விளாசல்
டெல்லி அணிக்கு ஆபத்பாந்தவானாக வந்திருக்கும் ஜேக் மெக்குர்க்! யார் இந்த 22 வயது வீரர் title=

டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி ஐபிஎல் 2024 சீசன் தொடக்கம் வழக்கம்போல் மோசமாக அமைந்தாலும், லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் அந்த அணி ஆடிய விதம் ஒரு நம்பிக்கையை கொடுத்திருக்கிறது. எஞ்சிய போட்டிகளிலும் அந்த அணி இதே பாணியில் விளையாடும்பட்சத்தில் ஐபிஎல் 2024 சுற்றின் பிளே ஆப் சுற்றுக்கு செல்ல முடியும். டெல்லி அணி மீது இந்த நம்பிக்கை வந்திருப்பதற்கு காரணம் அந்த அணியின் மிடில் ஆர்டரில் புதிதாக என்ட்ரியாகியிருக்கும் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த 22 வயதே ஆன ஜேக் ஃப்ரேசர்-மெக்குர்க் தான். அவரின் அதிரடியில் தான் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான சேஸிங்கில் 11 பந்துகளை மீதம் வைத்து சூப்பரான வெற்றியை பெற்றிருக்கிறது.

மேலும் படிக்க | சிஎஸ்கேவில் இந்த 5 வீரர்கள் முக்கியம்... வான்கடேவில் மும்பையை ஈஸியாக வீழ்த்தலாம்!

முதலில் பேட்டிங் விளையாடிய லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 167 ரன்கள் எடுக்க, அதனை டெல்லி அணி 18.1 ஓவரில் 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 170 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. அந்த அணியில் பிரித்திவி ஷா 32 ரன்கள், ரிஷப் பன்ட் 41 ரன்கள் எடுக்க ஆஸ்திரேலிய அணியின் ஜேக் ஃப்ரேசர்-மெக்குர்க் 35 பந்துகளில் 55 ரன்கள் விளாசி அவுட்டானார். இதில் 2 பவுண்டரிகளும் 5 சிக்சர்களும் அடங்கும். குருணால் பாண்டியாவின் ஒரே ஓவரில் தொடர்ச்சியாக 3 சிக்சர்களை பறக்கவிட்டு அமர்களப்படுத்தினார் ஜேக் மெக்குர்க். இவருடைய பேட்டிங் பாணி டெல்லி அணிக்கு பெரும் நம்பிக்கையை கொடுத்திருக்கிறது. அதனால் தான் சேஸிங்கை சூப்பராக சேஸ் செய்திருக்கிறது.

ஃப்ரேசர்-மெக்குர்க் இளம் வயதில் இருந்தே அதிரடி பேட்ஸ்மேனாக வலம் வந்து கொண்டிருக்கிறார். 2019 ஆம் ஆண்டு தான் முதன்முறையாக விக்டோரியா அணிக்காக லீக் விளையாட தொடங்கினார். 17 வயதில் 19வயதுக்குட்பட்டோருக்கான உலக கோப்பையில் அரைசதம் அடித்த அவர், அடுத்து நடைபெற்ற கிளப் லீக் போட்டியில் ஷெஃபீல்ட் ஷீல்ட் அணிக்காக ஆடி அற்புதமான அரைசதம் விளாசினார். லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் அதிவேக அரைசதம் மற்றும் சதம் ஆகிய சாதனைகள் இப்போது இவர் வசம் தான் இருக்கின்றன. இந்த சாதனை இதற்கு முன்பாக ஏபி டிவில்லியர்ஸ், மேக்ஸ்வெல் வசம் இருந்தது, அற்புதமாகவும் அதிரடியாகவும் ஆடி இந்த சாதனைகளை தகர்த்துள்ளார்.

லக்னோ அணிக்கு எதிரான போட்டி தான் மெக்குர்க் அறிமுக ஐபிஎல் போட்டியாகும். முதல் போட்டியிலேயே அரைசதம் அடித்து தன்னுடைய முத்திரை பதித்துள்ளார். அத்துடன் கிரிக்கெட் உலகின் ஒட்டுமொத்த கவனத்தையும் ஈர்த்துவிட்டார். அடுத்தடுத்த போட்டிகளில் இதேபோன்றதொரு ஆட்டத்தை விளையாடும்பட்சத்தில் டெல்லி அணியின் வெற்றி சாத்தியமாகும், இவருக்கான ஐபிஎல் கிரிக்கெட்டின் மார்க்கெட்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்துவிடும். 

மேலும் படிக்க | ஆர்சிபிக்கு மேலும் ஒரு அடி... முக்கிய வீரர் விலகல் - என்ன செய்யப்போகிறார் டூ பிளெசிஸ்?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News