ஐபிஎல் 2022: கேப்டன் கேஎல் ராகுல் ஆட்டமிழக்காமல் 103 ரன்கள் எடுத்ததன் மூலம் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மும்பை இந்தியன்ஸ் அணியை வான்கடே மைதானத்தில் வீழ்த்தியது. கேஎல் ராகுல் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக எப்போதும் தனி சாதனை வைத்துள்ளார். இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2022 சீசனில் ரோஹித் ஷர்மா தலைமையிலான மும்பை அணிக்கு எதிராக தனது இரண்டாவது சதத்தை பதிவு செய்துள்ளார் ராகுல். பிரபோர்ன் ஸ்டேடியத்தில் நடந்த முதல் போட்டியில் மும்பைக்கு எதிராக ராகுல் 103 ரன்கள் எடுத்தார், அதே போல் நேற்று நடைபெற்ற வான்கடே ஸ்டேடியத்தில் 103 ரன்கள் அடித்தார்.
மேலும் படிக்க | ரோகித் சர்மாவின் இந்திய அணியின் கேப்டன்சிக்கும் ஆபத்து - இவர் பெயர் பரிசீலனை
நேற்று நடைபெற்ற போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் 36 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 2019 ஆம் ஆண்டில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக ஒரு சதம் அடித்து இருந்தார் ராகுல். இதன் மூலம் மும்பை இந்தியன்ஸுக்கு எதிராக தனது 3வது சதத்தை ராகுல் அடித்துள்ளார்.
- ஐபிஎல்லில் ஒரே எதிரணிக்கு எதிராக மூன்று சதங்கள் அடித்த முதல் வீரர் என்ற பெருமையை பெற்றார்.
- விராட் கோலிக்குப் பிறகு ஒரே சீசனில் ஒரே அணிக்கு எதிராக இரண்டு சதங்கள் அடித்த இரண்டாவது வீரர் என்ற பெருமையையும் பெற்றார்.
- நான்கு ஐபிஎல் சதங்களுடன், கோஹ்லியின் ஐந்து சதங்களுக்குப் பின்னால், போட்டிகளில் அதிக சதங்கள் அடித்த இந்தியர்களில் இரண்டாவது இடத்தைப் பெற்றுள்ளார். ஒட்டுமொத்தமாக 6 சதங்களுடன் கிறிஸ் கெயில் முதலிடத்தில் உள்ளார்.
- மேலும் ஒரு இந்தியரால் அதிக டி20 சதங்கள் அடித்த ரோஹித் ஷர்மாவுடன் இணைத்துள்ளார், இரண்டு வீரர்களும் மொத்தம் ஆறு சத்தங்கள் அடித்துள்ளனர்.
- தனக்குப் பிடித்த எதிரணி என்பதில் சந்தேகமே இல்லாமல் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக ராகுல் சாதனை படைத்துள்ளார்.
- மும்பைக்கு எதிராக 16 இன்னிங்ஸ்களில், 86.70 சராசரி மற்றும் 135.89 ஸ்ட்ரைக் ரேட்டில் 867 ரன்கள் எடுத்துள்ளார். அவர்களுக்கு எதிராக அவர் அடித்த மூன்று சதங்கள் தவிர, ஐந்து அரை சதங்களும் அடித்துள்ளார்.
மேலும் படிக்க | பொல்லார்டை கடுப்பேற்றிய முன்னாள் பார்ட்னர்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR