பொல்லார்டை கடுப்பேற்றிய முன்னாள் பார்ட்னர்

பொல்லார்டு அவுட்டானதும் குருணால் பாண்டியா செய்த செயலை ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

Written by - S.Karthikeyan | Last Updated : Apr 25, 2022, 11:27 AM IST
  • பொல்லார்டை கடுப்பேற்றிய குருணால் பாண்டியா
  • அவுட்டானதும் ஓடிச் சென்று தலையில் முத்தம் கொடுத்தார்
  • அவரை ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்
பொல்லார்டை கடுப்பேற்றிய முன்னாள் பார்ட்னர் title=

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ அணிகளுக்கு எதிரான போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் மும்பை அணி 36 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவி, இந்த ஐபிஎல் தொடரில் தொடர்ச்சியாக 8வது தோல்வியை சந்தித்த முதல் அணியாகவும் உள்ளது. இப்போட்டியில் கைரன் பொல்லார்டை குருணால் பாண்டியா கடுப்பேற்றியதை ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். 

மேலும் படிக்க | மரணத்தில் இருந்து தப்பித்த ஆஸ்திரேலிய முன்னாள் வீரர்

169 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை அணி 20 ஓவர் முடிவில் 132 ரன்கள் மட்டுமே எடுத்தது. பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்ட அதிரடி மன்னன் கைரன் பொல்லார்டு, குருணால் பாண்டியா வீசிய 20 வது ஓவரில் அவுட்டானார். அப்போது, குருணால் பாண்டியா வேகமாக ஓடிச் சென்று பொல்லார்டு மீது ஜம்ப் செய்து தலையில் முத்தம் கொடுத்தார். அவுட்டான கடுப்பில் இருந்த பொல்லார்டு, உடனடியாக ரியாக்ட் எதுவும் செய்யாமல், முகத்தில் மட்டும் கடுப்பை வெளிப்படுத்தியவாறு சென்றார்.

கமெண்ட்ரியில் இருந்த சுனில் கவாஸ்கர்கூட குருணால் பாண்டியாவின் அணுகுமுறை சரியானதல்ல எனக்கூறினார். பொல்லார்டு நல்லவேளை எதுவும் செய்யாமல் சென்றது அவருடைய முதிர்ச்சியைக் காட்டுவதாக இருக்கிறது என்றும் கூறினார். இந்நிலையில், சமூகவலைதளங்களில் பொல்லார்டை நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். மைதானத்துக்கு வெளியே அவர்கள் இருவரும் மிக நெருக்கமான நட்பு கொண்டவர்களாக இருக்கலாம், மைதானத்துக்குள் குருணால் பாண்டியா இப்படி நடந்து கொள்ளக்கூடாது என வசைபாடத் தொடங்கியுள்ளனர். 

இன்னும் சிலர், குருணால் பாண்டியாவுக்கு ஆதரவாகவும் சில பதிவுகளை போட்டுள்ளனர். இதுவரை நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் 8 போட்டிகளில் 5 வெற்றிகளை பெற்றுள்ள லக்னோ அணி புள்ளிப்பட்டியலில் 4வது இடத்தில் உள்ளது. மும்பை அணி 8 போட்டிகளிலும் தோல்வியை தழுவி கடைசி இடத்தில் உள்ளது. புதிய அணியாக ஐபிஎல் தொடரில் நுழைந்த லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி, இந்த தொடரில் 2 போட்டிகளிலும் மும்பை அணியை வீழ்த்தியுள்ளது. 

மேலும் படிக்க | சச்சின் பற்றி இதுவரை தெரியாத 10 சுவாரஸ்யத் தகவல்கள்! #HBDSachin

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News