குல்தீப் செய்த சம்பவம்: 2 இன்னிங்ஸிலும் இதை கவனிச்சீங்களா?

குல்தீப் யாதவ் ராஞ்சி டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் 100 பந்துகளுக்கு மேல் விளையாடினார். இதன் மூலம் அவரது பேட்டிங் நுணுக்கம் முன்னேறியிருப்பதாக பாராட்டு குவிந்து வருகிறது.   

Written by - S.Karthikeyan | Last Updated : Feb 25, 2024, 10:52 PM IST
  • சிறப்பாக பேட்டிங் ஆடிய குல்தீப்
  • 100 பந்துகளுக்கும் மேல் விளையாடினார்
  • அவரது பேட்டிங்கிற்கு கேப்டன் ரோகித் பாராட்டு
குல்தீப் செய்த சம்பவம்: 2 இன்னிங்ஸிலும் இதை கவனிச்சீங்களா? title=

இந்திய பேட்ஸ்மேன்கள் சொதப்பல்

ராஞ்சியில் இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான 4ஆவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. இதில், இங்கிலாந்து முதலில் டாஸ் வென்று விளையாடி 353 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஜோ ரூட் 122 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். பின்னர் இந்திய அணி முதல் இன்னிங்ஸை தொடங்கியது. இதில், கேப்டன் ரோகித் சர்மா முதல் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

துருவ் ஜூரல் - குல்தீப் ஜோடி

ரோகித் சர்மா 2, சுப்மன் கில் 38, ரஜத் படிதார் 17, ரவீந்திர ஜடேஜா 12, சர்ஃபராஸ் கான் 14, ரவிச்சந்திரன் அஸ்வின் 1 என்று அனைவருமே சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். யஷஸ்வி ஜெய்ஸ்வால் மட்டுமே 117 பந்துகள் பிடித்து 8 பவுண்டரி, ஒரு சிக்ஸர் உள்பட 73 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஒரு கட்டத்தில் இந்திய அணி 177 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய போது குல்தீப் யாதவ் மற்றும் துருவ் ஜூரேல் இருவரும் நிதானமாக நின்று விளையாடி விக்கெட் சரிவிலிருந்து மீட்டு ரன்களும் குவித்தனர்.

மேலும் படிக்க | நடப்பு சாம்பியனை சம்பவம் செய்த தமிழ்நாடு... ரஞ்சி டிராபி அரையிறுதியில் என்ட்ரி - ஏன் முக்கியம்?

100 பந்துகளுக்கு மேல் ஆடிய குல்தீப்

இந்த நிலையில் தான் இன்றைய 3ஆவது நாள் போட்டியை குல்தீப் யாதவ் மற்றும் துருவ் ஜூரெல் இருவரும் தொடங்கினர். இதில் குல்தீப் யாதவ் 131 பந்துகள் வரையில் தாக்குப்பிடித்து 2 பவுண்டரி உள்பட 28 ரன்கள் சேர்த்துக் கொடுத்துள்ளார். முதல் இன்னிங்ஸில் யஷஸ்வி ஜெய்ஸ்வாலுக்கு பிறகு 100 பந்துகளுக்கு மேல் மைதானத்தில் நின்ற வீரர் என்ற பெருமையை குல்தீப் யாதவ் பெற்றுள்ளார். மேலும், அவர் பேட்டிங் செய்வதை பெவிலியனில் அமர்ந்து ரோகித் சர்மா, சுப்மன் கில் ஆகியோர் ரசித்து பார்த்துள்ளனர்.

குல்தீப் பேட்டிங் வளர்ச்சி

ஒரு பவுலராக இவ்வளவு பந்துகள் வரையில் பிடித்து அணியை விக்கெட் சரிவிலிருந்து மீட்டு கொடுத்ததற்கு கேப்டன் ரோகித் சர்மா மற்றும் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் இருவரும் பாராட்டு தெரிவித்துள்ளனர். முந்தைய ராஜ்கோட் டெஸ்ட் போட்டியிலும் குல்தீப் யாதவ் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தினார். தொடர்ந்து அவர் பேட்டிங்கில் முன்னேற்றம் கண்டுவருவது இந்திய அணியில் கவனத்தை பெற்றிருப்பதால் எதிர்காலத்தில் அணி தேர்வில் இதுவும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட வாய்ப்பு இருக்கிறது.

மேலும் படிக்க | பரிதாப நிலையில் பாஸ்பால்... வெற்றியை நெருங்கும் இந்தியா... ரோஹித் - ஜெய்ஸ்வால் மிரட்டல்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News