பீலேவின் சாதனையை முறியடித்தார் மெஸ்ஸி"

"34 வயதான மெஸ்ஸி 14ஆவது , 64ஆவது  88 நிமிடங்களில் அடுத்தடுத்து கோல்கள் அடித்து ஹாட்ரிக் சாதனை படைத்தார்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Sep 11, 2021, 10:32 AM IST
பீலேவின் சாதனையை முறியடித்தார் மெஸ்ஸி" title=

 

உலககோப்பை கால்பந்து போட்டி அடுத்த ஆண்டு கத்தாரில் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் நடக்கிறது.இதற்கான தகுதி சுற்று போட்டிகள் பல்வேறு இடங்களில் நடந்து வருகின்றது. இந்த போட்டியில் தென் அமெரிக்ககண்ட அணிகளுக்கான தகுதிச் சுற்றுப் போட்டியில் அர்ஜென்டினா தலைநகர் பியூனஸ் அயர்ஸில் நேற்று முன்தினம் இரவு நடந்த ஆட்டம் ஒன்றில் லியோனல் மெஸ்ஸி தலைமையிலான "அர்ஜென்டினா அணி பொலிவியாவை எதிர்கொண்டது. தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தி வந்த அர்ஜெண்டினா அணி 3 - 0 என்ற கோல் கணக்கில் பொலிவியாவை தோற்கடித்தது.

"34 வயதான மெஸ்ஸி 14ஆவது , 64ஆவது  88 நிமிடங்களில் அடுத்தடுத்து கோல்கள் அடித்து ஹாட்ரிக் சாதனை படைத்தார். அவர் சர்வதேச போட்டியில் "ஹாட்ரிக் கோல்கள் அடிப்பது இது 7வது முறையாகும்.

ALSO READ : Paralaympics போட்டிகளில் கலந்து கொண்ட அணியினரை நேரில் சந்தித்து வாழ்த்திய பிரதமர்

இந்தப் போட்டியில் மெஸ்ஸி 2ஆவது கோலை அடித்தபோது சர்வதேச போட்டியில் அதிக கோல் அடித்த தென் அமெரிக்க கண்டத்தை சேர்ந்த வீரர் என்ற சாதனையை தன்வசப்படுத்தினார்.

அவர் 153 சர்வதேச போட்டிகளில் விளையாடி 79 கோல்கள் அடித்துள்ளார்.இதற்கு முன்பு பிரேசில் முன்னாள் கதாநாயகன் பீலே (77 கோல்கள் , 92 ஆட்டங்கள் ) அதிக கோல் அடித்த தென் அமெரிக்க கண்டத்தை சேர்ந்த வீரராக விளங்கினார். இப்போது அவரது சாதனையை மெஸ்ஸி முறியடித்திருக்கிறார்.

சர்வதேச போட்டியில் ஒட்டுமொத்தத்தில் அதிக கோல்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் போர்ச்சுக்கல் அணியின் கேப்டன் கிறிஸ்டியானோ ரொனால்டோ 180 ஆட்டங்களில் விளையாடி 111 கோல்கள் அடித்து முதலிடத்தில் இருக்கிறார்.

இப்போது இந்த வரிசையில் லியோனல் மெஸ்ஸி 5வது இடத்தை ஜாம்பியா வீரர் காட்பிரையுடன் இணைந்து வகிக்கிறார்.

ALSO READ : கொரோனா ஏற்படுத்திய சிக்கல்; India vs England 5வது டெஸ்ட் போட்டி ரத்து..!!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News