புதுடெல்லி: இந்திய பாராலிம்பிக் வீரர்கள் டோக்கியோவில் வரலாற்று சாதனை நிகழ்த்தி வரலாறு படைத்துள்ளனர். பாராலிம்பிக் குழுவினரை தனது இல்லத்திற்கு அழைத்து பிரதமர் நரேந்திர மோடி கவுரவித்தார். பாராலிம்பிக் குழுவைச் சேர்ந்த அனைவரும் தங்கள் கையொப்பமிட்ட சால்வையை பிரதமருக்கு பரிசளித்தனர்.
இந்த ஆண்டு நடைபெற்ற பாராலிம்பிக் போட்டிகளில், ஐந்து தங்கம், எட்டு வெள்ளி மற்றும் ஆறு வெண்கலம் உட்பட 19 பதக்கங்களை இந்திய அணியினர் வென்றனர். கலந்துக் கொண்ட அனைத்து பாராலிம்பிக் போட்டிகளிலும் இந்த ஆண்டு தான் இந்தியா அதிக பதக்கங்களை பெற்றுள்ளது. பதக்கப் பட்டியலில் இந்தியா 24 வது இடத்தைப் பிடித்தது.
பதக்க வெற்றியாளர்கள் அனைவரும் தங்கள் கையொப்பமிட்ட வெள்ளை துண்டை பிரதமருக்கு வழங்கினார்கள். அதை பெற்றுக் கொண்ட பிரதமர், அதை தனது கழுத்தில் அணிந்துக் கொண்டார். தங்களுக்கு பதக்கங்களை வென்றுக் கொடுத்த விளையாட்டு உபகரணங்களையும் வீரர்கள் பிரதமருக்கு பரிசளித்தனர்.
வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களுடன் தனிப்பட்ட முறையில் பேசிய பிரதமர் இந்த விளையாட்டு உபகரணங்கள் ஏலம் விடப்படும் என்று பிரதமர் கூறினார்.
Also Read | T20 World Cup அணியில் இடம் பெறாத 5 கிரிக்கெட் வீரர்கள்…
பாராலிம்பியன்களின் சாதனைகள் நாட்டின் விளையாட்டு சமூகத்தின் மன உறுதியை அதிகரித்துள்ளது மற்றும் வளர்ந்து வரும் விளையாட்டு வீரர்களுக்கு உத்வேகம் அளித்துள்ளது என பிரதமர் பாராட்டினார்.
பதக்கம் வென்ற பிறகு பாரா விளையாட்டு வீரர்களை முதலில் தொலைபேசியில் பிரதமர மோடி வாழ்த்தினார். இந்திய அணியின் மன உறுதியை பாராட்டிய பிரதமர், அவர்கள் என்றும் மன உறுதியை கைவிடக்கூடாது என்றும் அறிவுறுத்தினார்.
தங்கள் வாழ்க்கையில் ஏற்றத்தாழ்வுகளை எதிர்கொண்ட வீரர்களின் சாதனை மிகவும் பாராட்டத்தக்கது என பிரதமர் கூறினார். பதக்கங்களை வெல்லத் தவறிய வீரர்களின் மன உறுதியையும் பாராட்டிய பிரதமர், வெற்றி தோல்வியால் திசைதிருப்பப்படாமல் முன்னேற வேண்டும் என்று அறிவுறுத்தினார்.
பதக்கங்களை வென்ற அவனி லேகாரா (Avani Lekhara), சிங்கராஜ் அதனா இருவருமே, இடுப்புக்கு கீழே முடங்கியவர்கள். பாராலிம்பிக்கில் தங்கம் மற்றும் வெண்கலப் பதக்கம் வென்று வரலாற்றைப் படைத்தார் லேகாரா. அதே நேரத்தில், 39 வயதான அதானா, குழந்தை பருவத்தில் போலியோவால் பாதிக்கப்பட்டவர், வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்களை வென்றார்.
Also Read | T20 World Cup: இந்திய அணியை அறிவித்தது பிசிசிஐ
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR