தோல்விக்காக விளையாடிய கொல்கத்தா - லக்னோ மீண்டும் கிளாசிக் வெற்றி

கொல்கத்தா அணியின் பேட்டிங், தோல்வி மட்டுமே எங்களுக்கு வேண்டும் என்பது போல் இருந்தது.

Written by - S.Karthikeyan | Last Updated : May 7, 2022, 11:12 PM IST
  • மோசமாக விளையாடிய கொல்கத்தா அணி
  • 75 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி
  • புள்ளிப்பட்டியலில் லக்னோ அணி முதலிடம்
தோல்விக்காக விளையாடிய கொல்கத்தா - லக்னோ மீண்டும் கிளாசிக் வெற்றி title=

ஐபிஎல் 2022 தொடரின் 53 -வது மேட்சில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும் மோதின. இப்போட்டியில் முதலில் களமிறங்கிய லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி, 20 ஓவரில் 176 ரன்கள் எடுத்தது. தொடக்க வீரராக களமிறங்கிய குயின்டன் டிகாக் 29 பந்துகளில் 50 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார். அவருக்கு அடுத்தபடியாக அதிரடியாக ஆடிய தீபக் ஹூடா 27 பந்துகளில் 41 ரன்கள் விளாசினார். பின்வரிசையில் களமிறங்கிய ஸ்டொயினஸ் வாணவேடிக்கை காட்டினார்.

மேலும் படிக்க | ஐபிஎல் போட்டிக்கு திரும்பும் கிறிஸ் கெயில் - 2 அணிகளுக்கு ஆட விருப்பம்

ஷிவம் மாவியின் ஒரே ஓவரில் மட்டும் தொடர்ச்சியாக 3 சிக்சர்களை பறக்கவிட்ட அவர், 4வது சிக்சருக்கு முயற்சித்தபோது கேட்சாகி வெளியேறினார். 14 பந்துகளில் 28 ரன்கள் விளாசினார். ஜேசன் ஹோல்டர் இறுதிக் கட்டத்தில் தன் பங்குக்கு 2 சிக்சர்கள் விளாசினார். இவர்கள் இருவரின் அதிரடி, லக்னோ அணி இறுதிக் கட்டத்தில் சவாலான ஸ்கோரை எட்ட உதவியது. இதனைத் தொடர்ந்து களமிறங்கிய கொல்கத்தா அணி, தோல்வி மட்டுமே எங்களுக்கு வேண்டும் என்பதுபோல் பேட்டிங் ஆடியது.

அந்த அணி வீரர்கள் வெற்றி இலக்கை நோக்கி ஆடாமல் அல்லது கவலைப்படாமல் வருவதும் போவதுமாக இருந்தனர். இதனால் அந்த அணி 101 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 75 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்தது. ரஸ்ஸல் மட்டும் தன் பங்குக்கு வாண வேடிக்கை காட்டினார். அவரும் அணியை வெற்றி பெற வைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் விளையாடாமல், இருக்கும் வரை அடித்து ஆடிவிட்டு செல்ல வேண்டும் என ஆடினார். 19 பந்துகளில் 45 ரன்கள் எடுத்தார். இதில் 5 சிக்சர்களும், 3 பவுண்டரிகளும் அடங்கும். சுனில் நரைன் 22 ரன்கள் எடுக்க, மற்ற வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களில் நடையைக் கட்டினர்.

மேலும் படிக்க | IPL: வயாகரா மாத்திரையை சாப்பிட்டாரா சூர்யகுமார் யாதவ்?

இந்த வெற்றியின் மூலம் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 16 புள்ளிகளுடன் முதல் இடத்துக்கு முன்னேறியது. கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி 7வது இடத்தில் உள்ளது. 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News