IPL: வயாகரா மாத்திரையை சாப்பிட்டாரா சூர்யகுமார் யாதவ்?

குஜராத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சூர்ய குமார் யாதவ் வயாகரா மாத்திரையை சாப்பிட்டதாக வீடியோ ஒன்று பரவுகிறது. 

Written by - S.Karthikeyan | Last Updated : May 7, 2022, 03:01 PM IST
  • சூர்யகுமார் யாதவ் வீடியோ வைரல்
  • வயாகரா மாத்திரை சாப்பிட்டாரா?
  • கொளுத்திப் போட்ட நெட்டிசன்
IPL: வயாகரா மாத்திரையை சாப்பிட்டாரா சூர்யகுமார் யாதவ்? title=

குஜராத் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையிலான நேற்றைய ஐபிஎல் போட்டி கடைசி பந்து வரை பரபரப்பாக சென்றது. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 177 ரன்கள் எடுத்தது. இந்த இலக்கை நோக்கி விளையாடிய குஜராத் அணி, ஒரு கட்டத்தில் எளிதாக வெற்றி பெறும் நிலையில் இருந்தது. 106 ரன்கள் வரை விக்கெட் விடாமல் விளையாடிய அந்த அணி, அதன்பிறகு அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழக்கத் தொடங்கியது.

மேலும் படிக்க | குஜராத் அணிக்கு விளையாடப்போகிறாரா பொல்லார்டு?

இதனால் ஆட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. கடைசி ஓவரில் 9 ரன்கள் தேவை என்ற நிலை இருந்தபோது, டேவிட் மில்லட் பேட்டிங் பிடித்தார். இதனால், குஜராத் வெற்றி பெற்றுவிடும் என நினைத்த பார்வையாளர்களுக்கு ஏமாற்றமே விஞ்சியது. டேனியல் சாம்ஸ் சிறப்பாக பந்துவீசி மும்பை அணியை 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்தார். கடைசி பந்தில் 6 ரன்கள் தேவை என்றபோது, சாம்ஸ் ரன் எடுக்க முடியாத வகையில் அற்புதமாக வீசினார்.

இப்போட்டியில் சூர்ய குமார் யாதவ் பேட்டிங் செய்தபோது எடுக்கப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. ரஷித்கான் ஓவருக்கு முன்பாக அவர் வெள்ளை நிறத்திலான மாத்திரை ஒன்றை எடுத்துக் கொள்கிறார். அது என்ன மாத்திரை? என்ற தகவல் தெரியவில்லை. ஆனால், நெட்டிசன் ஒருவர், சிறப்பாக விளையாடுவதற்காக சூர்யகுமார் யாதவ் ‘வயாகரா’ மாத்திரையை எடுத்துக் கொள்கிறாரா? என்ற கேள்வியுடன் வீடியோவை பகிர்ந்துள்ளார். அவர் கொளுத்திப் போட்ட இந்த வீடியோ இணையத்தில் தீயாக பரவி வருகிறது. 

மேலும் படிக்க | ஐபிஎல் 2022: வித்தியாசமான முறையில் அவுட் ஆனா சாய் சுதர்சன்!

11 பந்துகளை எதிர்கொண்ட சூர்யகுமார் யாதவ் ஒரு சிக்சருடன் 13 ரன்கள் எடுத்து அவுட்டானார். இப்போட்டியின் மூலம் 2வது வெற்றியை பெற்ற மும்பை அணி, புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் இருக்கிறது. 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News