5 முறை கிராண்ட்சிலாம் பட்டம் வென்ற பிரபல டென்னிஸ் வீராங்கனை மரியா ஷரபோவா. இவரின் ஆட்டத்தை பார்க்கவே பலரும் டிவி முன்பு அமர்வார்கள். அவ்வளவு அழகான உடல்வாக்கு கொண்ட மரியா ஷரபோவா விளையாடும் போது அனைவரின் கவனத்தை ஈர்ப்பதில் வல்லவர்.
மரியா ஷரபோவா "மெல்போனியம்" என்ற ஊக்க மருந்தை பயன்படுத்தியது தெரிய வந்தது. இதையடுத்து எந்த போட்டியிலும் கலந்துகொள்ள முடியாதபடி அவருக்கு சர்வதேச டென்னிஸ் சம்மேளனம் தடை விதித்துள்ளது. அவர் ஊக்க மருந்து பயன்படுத்தியது உறுதி செய்யப்பட்டது. மேலும் அவருக்கு 4 ஆண்டு டென்னிஸ் விளையாட தடை விதிக்கப்பட்டது.
தான் தெரியாமல் தவறு செய்து விட்டேன் தனக்கு மீண்டும் விளையாட வாய்ப்பு கிடைக்கும் என நம்புவதாக தெரிவித்து இருந்தார். ரஷிய டென்னிஸ் சம்மேளனமே அவருக்கு உறுதுணையாக இல்லாததால் அவர் விரக்தி அடைந்து உள்ளதாக கூறப்படுகிறது. மீண்டும் விளையாட வாய்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருந்த ஷரபோவாவின் எண்ணத்துக்கு தடுங்கள் ஏற்பட்டுள்ளது.
ரஷியாவின் டென்னிஸ் சம்மேளன தலைவர் "ஷமில் டர்பீஸ்சோவ்" கூறுகையில்: ஷரபோவா சூழ்நிலை கடினமாக இருக்கிறது. அவர் மீண்டும் விளையாட முடியுமா? என்பது சந்தேகம். விளையாட முடியாமல் கூட போகலாம் என்று தெரிவித்தார். இதனால் அவர் டென்னிஸ் விளையாட்டிலிருந்து ஓய்வு பெறும் முடிவை கூடிய சீக்கரமே எடுக்கலாம் என்று தகவல் வெளியாகிருக்கிறது.