இந்தியாவின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி தற்போது இந்திய ட்ரோன் நிறுவனமான கருடா ஏரோஸ்பேஸின் பங்குதாரராக மாறியுள்ளார். ட்ரோன்களை பயன்படுத்தி விவசாயத்தை ஊக்குவிக்கும் முயற்சியில் இந்நிறுவனம் ஈடுபடும் நிலையில் தற்போது இந்த முயற்சியில் பங்கேற்கும் விதமாக இந்நிறுவனத்தில் தோனி முதலீடு செய்து இருக்கிறார். ஐபிஎல் 2022க்குப் பிறகு கிரிக்கெட்டை விட்டு சிறிது காலம் ஒதுங்கியிருந்த தோனி தொடர்ந்து அடுத்தடுத்த பணிகளில் கவனம் செலுத்த தொடங்கினார்.
மேலும் படிக்க | அடுத்த சீசனில் இந்த 3 வீரர்களை கழட்டிவிடும் SRH அணி!
ஆடை, மதுபானம் மற்றும் விவசாயம் என பல்வேறு தொழில்களில் தோனி ஈடுபட்டு வருமானம் ஈட்டி வருகிறார். இந்த தொழில்களிலிருந்து சற்று மாறுப்பட்ட தொழிலான ஆளில்லா விமானங்கள் மூலம் விவசாயத்தை மேம்படுத்தும் முயற்சியில் முதலீடு செய்து இருக்கிறார். கருடா ஏரோஸ்பேஸ் எனும் இந்திய ட்ரோன் தயாரிக்கும் நிறுவனம், தங்களது நிறுவனத்தில் எம்.எஸ்.தோனி பங்குதாரராக மாறியிருப்பதை பெருமையாக தெரிவித்துள்ளதோடு இதன்மூலம் தங்களது நிறுவனம் சக்தி வாய்ந்த நிறுவனமாக மாறியுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
சென்னையைச் சேர்ந்த கருடா ஏரோஸ்பேஸ் நிறுவனத்தில் தோனி ஒரு குறிப்பிட்ட தொகையை முதலீடு செய்துள்ளார், ஆனால் எவ்வளவு தொகை என்பது குறித்த விவரங்கள் வெளிவரவில்லை. இந்நிறுவனத்தில் முதலீடு செய்தது குறித்து தோனி கூறுகையில், "கருடா ஏரோஸ்பேஸின் ஒரு பகுதியாக இருப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன், மேலும் அவர்கள் வழங்கும் தனித்துவமான ட்ரோன்களுடன் அவர்களின் வளர்ச்சியை காண ஆவலுடன் காத்திருக்கிறேன்" என்று கூறியுள்ளார். மேலும் இவர் கருடா ஏரோஸ்பேஸ் நிறுவனத்தின் பிராண்ட் அம்பாசிடராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.
மேலும் இதுகுறித்து அந்நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி அக்னிஷ்வர் ஜெயபிரகாஷ் கூறுகையில், "நான் எப்போதும் எம்.எஸ் தோனியின் தீவிர ரசிகர் மற்றும் கருடா ஏரோஸ்பேஸ் குடும்பத்தில் அவரும் ஒருவராக இருக்க வேண்டும் என்று நான் கண்ட கனவு நனவாகிவிட்டது. மஹி என்பது அர்ப்பணிப்பின் உருவம் மற்றும் எங்கள் கூட்டணியில் இந்த கேப்டன் இருப்பது மிகப்பெரிய மதிப்பைச் சேர்க்கும் என்று நான் உறுதியாக நம்புகிறேன், இது எங்களை சிறப்பாகச் செயல்படத் தூண்டும்" என்று அவர் மேலும் கூறினார்.
மேலும் படிக்க | திடீர் சென்னை விசிட் அடித்த தோனி! காரணம் இதான்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR