Rohit Sharma : ’தனியுரிமையை பாதிக்கிறது’ ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் மீது ரோகித் சர்மா அதிருப்தி

ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளின்போது நண்பர்களுடன் பேசிய உரையாடலை வெளியிட்ட ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் மீது இந்திய அணியின் கேப்னும், மும்பை இந்தியன்ஸ் பிளேயருமான ரோகித் சர்மா அதிருப்தி தெரிவித்துள்ளார். 

Written by - S.Karthikeyan | Last Updated : May 19, 2024, 06:13 PM IST
  • ஸ்டார் ஸ்போர்ட்ஸ் எப்படி இப்படி செய்யலாம்?
  • இது என்னுடைய தனியுரிமையை பாதிக்கிறது
  • ரோகித் சர்மா வெளியிட்ட கடும் அதிருப்தி
Rohit Sharma : ’தனியுரிமையை பாதிக்கிறது’ ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் மீது ரோகித் சர்மா அதிருப்தி title=

ஐபிஎல் கிரிக்கெட்டின்போது அபிஷேக் நாயருடன் பேசிக் கொண்டிருந்ததை ஒளிபரப்பிய ஸ்டார் ஸ்போரட்ஸ் நிறுவனத்துக்கு ரோகித் சர்மா கடும் அதிருப்தியை தெரிவித்துள்ளார். இதுபோன்ற செயல்கள் எதிர்காலத்தில் கிரிக்கெட் ரசிகர்கள், கிரிக்கெட் வீரர்கள் மற்றும் கிரிக்கெட்டுக்கும் இடையே விரிசலை ஏற்படுத்தும் என்றும் எச்சரித்துள்ளார். ஐபிஎல் 2024 கிரிக்கெட் சீசனில் லீக் போட்டிகள் எல்லாம் நிறைவடைந்து பிளே ஆஃப் சுற்றுக்கு நகர்ந்துவிட்டது. இதில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள்  ஐபிஎல் 2024 புள்ளிப் பட்டியலில் முதல் நான்கு இடத்தைப் பிடித்து பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுவிட்டன. ஐந்து முறை ஐபிஎல் சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் இம்முறை புள்ளிப் பட்டியலில் 10வது இடத்தைப் பிடித்து முதல் அணியாக வெளியேறியது. 

மேலும் படிக்க | பிளே ஆப் சென்றது ஆர்சிபி... தோல்வியுடன் விடைபெறுகிறாரா தோனி - வெளியேறிய சிஎஸ்கே!

அந்த அணி 14 போட்டிகளில் விளையாடி நான்கு போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. கேப்டன் பொறுப்பு ஹர்திக் பாண்டியாவிடம் ஒப்படைக்கப்பட்டதால் முன்னாள் கேப்டன் ரோகித் சர்மா உள்ளிட்டோர் அணி நிர்வாகம் மீது கடும் அதிருப்தியில் இருந்தனர். அதனால், பிளேயர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து விளையாடவில்லை. அணி நிர்வாகத்தின் இத்தகைய தன்னிச்சையான முடிவு மும்பை இந்தியன்ஸ் அணியின் இந்தாண்டு ஆட்டத்தில் எதிரொலித்தது. இருப்பினும் ஒரு பேட்ஸ்மேனாக ரோகித் சர்மா ஒன்றிரண்டு போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டார். தன்னுடைய மோசமான பேட்டிங் குறித்தும் அவரே வெளிப்படையாக பேசினார்.

இது குறித்து ஐபிஎல் கடைசி லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் ஆடிய பிறகு பேசிய அவர், என்னுடைய ஆட்டத்திறனுக்கு ஏற்ப நான் இந்த ஐபிஎல் தொடரில் ஆடவில்லை என்பது எனக்கு தெரியும். இருப்பினும், நான் செய்து பார்த்த புதிய முயற்சிகள் எல்லாம் என்னுடைய அடுத்தக்கட்ட கிரிக்கெட்டுக்கு உதவும் என்ற நம்பிக்கை இந்த ஐபிஎல் கொடுத்திருக்கிறது என கூறினார். அதேநேரத்தில், மும்பை இந்தியன்ஸ் அணி மீதான அதிருப்தியையும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியின்போது வெளிப்படையாக காண்பித்தார். அபிஷேக் நாயருடன் பேசும்போது, மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் பொறுப்பு மாற்றம் குறித்து எடுத்த முடிவில் உடன்பாடில்லை எனவும், அணி இப்போது இருக்கும் நிலைக்கு அவர்களே காரணம் என்றும் தெரிவித்தார். இந்த உரையாடலை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் எடிட் செய்யாமல் அப்படியே தொலைக்காட்சி மற்றும் சோஷியல் மீடியாவில் அப்லோடு செய்துவிட்டது.

கிரிக்கெட் வட்டாரத்தில் சலசலப்பு ஏற்ப்பட்டவுடன் உடனடியாக அதனை நீக்கியும் விட்டது. பின்னர் மற்றொரு போட்டிக்கு முன்பாக ரோகித் சர்மா, நண்பர்கள் தவல் குல்கர்னி உள்ளிட்டோருடன் பேசிக் கொண்டிருக்கும்போது ஆடியோவை மியூட் செய்யுமாறு கேட்டுக் கொண்டார். அந்த வீடியோவையும் அப்படியே ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் அப்லோடு செய்துவிட்டது. இதற்கு தான் ரோகித் சர்மா தன்னுடைய அதிருப்தியை இப்போது தெரிவித்திருக்கிறார். இப்படி ஒரு ஒளிபரப்பு நிறுவனம் செய்யக்கூடாது என்றும் அவர் கேட்டுக் கொண்டிருக்கிறார். ரோகித் சர்மாவின் இந்த அதிருப்தி ஐபிஎல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. 

மேலும் படிக்க | தோனி முதல் விராட் கோலி வரை! அதிக சொத்து மதிப்பு கொண்ட வீரர்களின் முழு விவரம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News