பாகிஸ்தானின் பிரபல கிரிக்கெட் வீரர் இடது கை பேட்ஸ்மேன் Khushdil Shah மூன்று வாரங்கள் வரை போட்டிகளில் பங்கேற்க மாட்டார் என்பது பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்பதற்காக ஞாயிற்றுக்கிழமையன்று Derby-இல் Khushdil Shah பயிற்சி செய்துக் கொண்டிருந்தார். இடது கை பேட்ஸ்மேனான குஷ்தில் ஷா மும்முரமாக பயிற்சி மேற்கொண்டிருந்தபோது, இடது கையின் கட்டைவிரலில் எலும்பு முறிவு ஏற்பட்டுவிட்டது.
இதனால் அவரால் மூன்று வாரங்கள் வரை முழுத் திறமுடன் கிரிக்கெட் போட்டிகளில் விளையாட முடியாது. குஷ்தில் தற்போது நான்கு நாள் intra-squad போட்டிகளில் இடம்பெறவில்லை.
Read Also | England vs West Indies: கொரோனா Bio-Secure கட்டுப்பாட்டை மீறிய இங்கிலாந்து வீரர்
Derby-இல் ஜூலை 24-27 வரை நடைபெறும் அடுத்த intra-squad போட்டியிலும் அவரால் விளையாட முடியாது. இந்த செய்தியை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் Pakistan Cricket Board (PCB) உறுதிப்படுத்தியது.
"அவரது நகத்தில் காயம் ஏது ஏற்படவில்லை, நகக்கண்ணிலும் சேதம் ஏதும் இல்லை. குஷ்தில் அடுத்த வார இறுதிக்குள் தனது பயிற்சிகளைத் தொடங்கிவிடுவார் என்று எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணர், குழு மருத்துவரும், physiotherapist குழுவினரும் எதிர்பார்க்கிறார்கள்” என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் PCB வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மூன்று டெஸ்ட் போட்டிகளிலும், பல T20 போட்டிகளிலும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி, இங்கிலாந்து அணியுடன் விளையாடவிருக்கிறது. இந்தப் போட்டித் தொடரின் முதல் டெஸ்ட் போட்டி, மான்செஸ்டரில் ஆகஸ்ட் 5ஆம் தேதியன்று தொடங்கும்.
தற்போது பாகிஸ்தான் கிரிக்கெட் அணியைச் சேர்ந்த அனைவரும் இங்கிலாந்தில் 14 நாள் quarantine-இல் இருந்தனர். அதன் பிறகு, பாகிஸ்தான் கிரிக்கெட் அணி Derbyshireக்கு சென்றுள்ளது.
இந்த நிலையில் குஷ்தில் கையில் ஏற்பட்ட காயத்தினால் மூன்று வாரங்களுக்கு போட்டிகளில் பங்கேற்க முடியாது என்பது பாகிஸ்தான் அணியின் கவலைகளை அதிகரித்துள்ளது.