ஆசிய விளையாட்டு போட்டி பேட்மிண்டன் மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் PV சிந்து வெள்ளி வென்றார்!
18_வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் இந்தோனேசியாவின் ஜகார்த்தா மற்றும் பலேம்பங் நகரங்களில் கடந்த ஆகஸ்ட் 18 ஆம் தேதி துவங்கி நடைபெற்று வருகின்றன.
இப்போட்டிகளின் 10-வது நாளான இன்று பேட்மிண்ன் மகளிர் ஒற்றையர் பிரிவு போட்டிகளின் இறுதி போட்டி நடைப்பெற்றது. இப்போட்டியில் இந்தியாவின் PV சிந்து, சீனாவின் தை சூ யிங் உடன் போட்டியிட்டார்.
#AsianGames2018: Indian Shuttler PV Sindhu wins silver medal after losing to Tai Tzu Ying in Women's Badminton Singles pic.twitter.com/GOb8W3zdXF
— ANI (@ANI) August 28, 2018
பரபரப்பாக சென்ற இப்போட்டியில் ஐப்பான் வீராங்கனை யாமாகுச்சி-யை 13-21 16-21 என்ற நேர் செட் கணக்கில் PV சிந்து தோல்வியுற்றார். முன்னதாக நேற்றைய போட்டியில் அரையிறுதி ஆட்டத்தில் சீனாவின் தை சூ யிங் உடன் போட்டியிட்ட இந்தியாவின் சாய்னா தோல்வியை தழுவினார். இதனையடுத்து வெண்கலப் பதக்கத்துடன் அவர் வெளியேறினார்.
மற்றொரு அரையிறுதி போட்டியில் ஐப்பானின் யாமாகுச்சி-யை வெற்றிக்கொண்ட PV சிந்து இன்று இறுதி போட்டியில் சீனாவின் தை சூ யிங் வசம் தோல்வியுற்ற வெள்ளி பதக்கம் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது!