பிசிசிஐ நிர்வாகிகள் குழுவிலிருந்து ராஜினாமா செய்தார் ராமச்சந்திர குஹா

Last Updated : Jun 1, 2017, 02:49 PM IST
பிசிசிஐ நிர்வாகிகள் குழுவிலிருந்து ராஜினாமா செய்தார் ராமச்சந்திர குஹா title=

பிசிசிஐ-யின் நிர்வாகிகள் குழுவிலிருந்து விலகுவதாக ராமச்சந்திர குஹா தெரிவித்துள்ளார். 

இந்திய கிரிக்கெட் வாரியத்தின் நிர்வாகிகளை நியமிப்பது தொடர்பாக, நீதிபதி லோதா தலைமையில் சுப்ரீம் கோர்ட் குழு ஒன்றை அமைத்தது. 

லோதா குழுவின் பரிந்துரையின் பெயரில், ஜனவரி 30-ம் தேதி பிசிசிஐ-க்கு நிர்வாகிகளை சுப்ரீம் கோர்ட் நியமனம் செய்தது. அதன்படி, இந்திய அரசின் ஆடிட்டர் வினோத்ராய், பிசிசிஐ-யின் தலைவராக நியமிக்கப்பட்டார். 

மேலும், ராமச்சந்திர குஹா உள்ளிட்ட நான்கு நிர்வாகிகளை பிசிசிஐ-க்கு உச்சநீதிமன்றம் நியமனம் செய்தது.

Trending News